பிரான்ஸ் ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 வீரர்கள் பலி

பிரான்ஸ் ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 வீரர்கள் பலி
மாதிரி படம்
  • News18
  • Last Updated: November 27, 2019, 1:05 PM IST
  • Share this:
மாலியில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரான்சின் ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 வீரர்கள் உயிரிழந்தனர்.

மாலி நாட்டின் வடக்கு பகுதியை அல்கொய்தா மற்றும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகள் கடந்த 2012-ம் ஆண்டு தங்களது கைவசம் கொண்டு வந்தன.

அவர்களை பிரான்ஸ் தலைமையிலான ராணுவத்தினர் விரட்டியடித்தனர். ஆனாலும் மற்ற பகுதிகளில் அவர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது 2 பிரான்ஸ் ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பிரான்ஸ் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Also see...
First published: November 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading