பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு: வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டங்களில் 13 பேர் பலி?

வங்கதேசத்தில் வன்முறை

வங்க தேசத்தில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டஙக்ளில் 13 பேர் வரை பலியானதாக தகவல்.

  • Share this:
பிரதமர் மோடியின் வங்கதேச பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்த ச்ம்பவம் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அரசாங்கத்தை சங்கடப்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் 50வது ஆண்டு பொன் விழா தேசிய தினத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பை ஏற்று 15 மாதங்களில் முதல் வெளிநாட்டு பயணமாக 2 நாட்கள் வங்கதேசத்திற்கு சென்று திரும்பியுள்ளார் பிரதமர் மோடி. அந்நாட்டின் சுதந்திர தின விழாவில் உரையாற்றியதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொண்டார்.

இதனிடையே இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வகுப்புவாத வன்முறைகளுக்கு காரணம் எனக் கூறி பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டங்களும் நடைபெற்றன, சில இடங்களில் போலீசாருக்கும், இஸ்லாமிய மிதவாதிகளுக்கும் இடையே மோதல் எழுந்தன. வன்முறை வெடித்தது. இதன் காரணமாக வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் ரப்பர் குண்டுகளால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர். இந்த களேபரத்தில் சிக்கி 13 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்கள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அழுத்தம் மற்றும் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வங்க தேசத்தில் வன்முறை


மேலும் இந்து கோவில்களையும் கலவரக்காரர்கள் குறி வைத்து தாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் 35 போலீசாருக்கு மேல் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பேருந்துகளுக்கு தீ வைத்து, நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் மீது கல்லெறிந்தும் போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வங்க தேசத்தில் போராட்டங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Published by:Arun
First published: