துபாய் விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது!

news18
Updated: June 7, 2019, 3:52 PM IST
துபாய் விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது!
விபத்துக்குள்ளான பேருந்து
news18
Updated: June 7, 2019, 3:52 PM IST
ஐக்கிய அமீரக நாடான துபாயில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

ஓமன் நாட்டின் தலைநகரம் மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

துபாய் அருகே வந்தபோது, சாலையில் இருந்த அறிவிப்பு பலகையின் மீது திடீரென மோதிய பேருந்து விபத்தில் சிக்கி நொறுங்கியது. இதில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

விபத்தில் 8 இந்தியர்கள் பலியாகியுள்ளதாக துபாயில் உள்ள இந்திய தூதரகம் முதலில் தெரிவித்தது.படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனால், பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் பெயர்கள்


விபத்தில் உயிரிழந்தவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

First published: June 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...