ஆஸ்திரேலியாவின் 111 வயதான முதியவர் பகிர்ந்து கொண்ட நீண்ட ஆயுள் ரகசியம்

நீண்ட ஆயுள் ரகசியம்

இவரது வயது 111. ஆஸ்திரேலியாவின் மூத்த மனிதரான டெக்ஸ்டர் க்ரூகர் இன்றும் ஆரோக்கியமுடன் வாழ்ந்து வருகிறார்.

  • Share this:
மருத்துவத் துறையின் அபார வளர்ச்சி காரணமாக அதிகரிக்கப்பட்ட மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் இன்றைய நவீன யுகத்தில் வாழ்க்கை மற்றும் உணவு முறை மாற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் மீண்டும் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த முதியவர் டெக்ஸ்டர் க்ரூகர் (Dexter Kruger). தற்போது இவரது வயது 111. ஆஸ்திரேலியாவின் மூத்த மனிதரான டெக்ஸ்டர் க்ரூகர் இன்றும் ஆரோக்கியமுடன் வாழ்ந்து வருகிறார். மேலும் இவர் இந்த வயதிலும் அபார நினைவு திறனை கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலிய நாட்டில் தற்போது வசிப்பவர்களிலேயே, மிக வயது மூத்தவர் டெக்ஸ்டர் க்ரூகர் தான் என்று ஆஸ்திரேலியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் நிறுவனர் ஜான் டெய்லர் தகவல் தெரிவித்துள்ளார். கிறிஸ்டினா குக் என்பவர் கடந்த 2002-ம் ஆண்டில் 114 வயது மற்றும் 148 நாட்களில் இறந்தார். ஆஸ்திரேலியாவின் முந்தைய வயதான மனிதர் முதல் உலகப் போரின் வீரர் ஜாக் லோக்கெட் ஆவார். அவர் 2002 இல் 111 வயது மற்றும் 123 நாட்களில் இறந்தார்.

அவருக்கு பிறகு தற்போது டெக்ஸ்டர் க்ரூகர் தான் ஆஸ்திரேலியாவின் மிக வயதான மனிதராக உள்ளார் என்பதை ஜான் டெய்லர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இத்தனை வயதிலும் தான் ஆரோக்கியமாக வாழ்வதற்கான ரகசியங்கள் குறித்து டெக்ஸ்டர் க்ரூகர் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதிலும் முக்கியமாக கோழி மூளைகளை தான் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் தான் இந்த வயதிலும் ஆரோக்கியத்தை பராமரிக்க முடிகிறது என கூறி அசைவ பிரியர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியுள்ளார்.

ALSO READ : கோவிட்டால் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் உயிர் காக்க சரியான நேரத்தில் உதவிய டாக்ஸி டிரைவர் - பாராட்டும் நெட்டிசன்கள்!

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் டெக்ஸ்டர் க்ரூகர் ஒரு கால்நடை மருத்துவரும் கூட, மேலும் இவர் பெரிய பண்ணையை அமைத்து கால்நடைகளை பராமரித்த ஓய்வு பெற்ற கால்நடை வளர்ப்பாளரும் ஆவார். தற்போது இவரது சரியான வயது 111 வயது மற்றும் 125 நாட்கள். டெக்ஸ்டர் க்ரூகர் கிராமப்புற குயின்ஸ்லாந்து மாநில நகரமான ரோமாவில் உள்ள தனது நர்ஸிங் ஹோமில், ஆஸ்திரேலிய பிராட்காஸ்டிங் கார்ப் நிறுவனம் நடத்திய நேர்காணலில் தனது நீண்ட ஆயுள் பற்றி பேசியுள்ளார். அப்போது தனது உணவில் அடிக்கடி கோழி இறைச்சி சேர்த்து கொள்வதும் தன்னுடைய ஆரோக்கியத்திற்கு காரணம் என்றார்.

ALSO READ : கொரோனா சிகிச்சை மையத்தில் குரங்குகள் அட்டகாசம் - தடுக்கும் போலீஸாரின் நூதன முயற்சி

அதிலும் மிக, சிறிய அளவில் இருக்கும் கோழி மூளை என்னுடைய நீண்ட ஆயுளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. கோழியின் மூளை ஒரே ஒரு கடிக்கு தான் வரும் என்றாலும் அவை நமக்கு ஆரோக்கியத்தை தரும் சுவைமிக்க சிறிய விஷயங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கோழியின் மூளை பறவையின் கண் பந்தை (eye ball) விட சிறியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டெக்ஸ்டர் க்ரூகரின் 74 வயது மகனான கிரெக், தன் தந்தையின் வழியை பின்பற்றி தாமும் ஆரோக்கியமாக இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது தனது சுயசரிதை டெக்ஸ்டர் க்ரூகர் எழுதி வருகிறார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: