எவரெஸ்ட் சிகரத்திலிருந்து அகற்றப்பட்ட 11ஆயிரம் கிலோ குப்பை!

’ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கிய தூய்மைப் பணியின் முதல் நாளிலேயே ஆயிரம் கிலோ குப்பை அப்புறப்படுத்தப்பட்டது’.

Web Desk | news18
Updated: June 6, 2019, 8:48 PM IST
எவரெஸ்ட் சிகரத்திலிருந்து அகற்றப்பட்ட 11ஆயிரம் கிலோ குப்பை!
(Reuters)
Web Desk | news18
Updated: June 6, 2019, 8:48 PM IST
உலகின் உயரிய மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்திலிருந்து சுமார் 11 ஆயிரம் கிலோ குப்பை அகற்றப்பட்டுள்ளது.

நேபாள அரசு சார்பில் எவரெஸ்ட் சிகரத்தைத் தூய்மைப்படுத்தும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த இரண்டு மாதங்களில்தான் 4 பிணங்கள், 11ஆயிரம் கிலோ குப்பை அகற்றப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் சிலிண்டர், ப்ளாஸ்டிக் பாட்டில், பேட்டரி, உணவுப் பொட்டலங்கள், உணவுக் குப்பைகள் என அள்ளப்பட்ட குப்பைகள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.

இதுகுறித்து நேபாள ராணுவ இயக்குநர் பிக்யன் தேவ் பாண்டே கூறுகையில், “அப்புறப்படுத்தப்பட்ட குப்பைகளில் மறுசுழற்சி செய்யப்படக் கூடிய குப்பைகள் இதுதொடர்பான ஒரு தன்னார்வ நிறுவனத்திடம் மறுசுழற்சிக்காகக் கொடுக்கப்பட்டன. ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கிய தூய்மைப் பணியின் முதல் நாளிலிலேயே ஆயிரம் கிலோ குப்பை அப்புறப்படுத்தப்பட்டது” என்றார்.

மேலும் பார்க்க: தூய்மை இந்தியா திட்டத்துக்கு யுனிசெஃப் ஒப்புதல்!
First published: June 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...