ஹோம் /நியூஸ் /உலகம் /

பிரதமருக்கு கடிதம் எழுதிய 11 வயது போலந்து சிறுமி!

பிரதமருக்கு கடிதம் எழுதிய 11 வயது போலந்து சிறுமி!

போலந்து சிறுமி | மோடி

போலந்து சிறுமி | மோடி

பிரதமர் மோடிக்கு மட்டுமின்றி புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஜெய் சங்கருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவிற்கு வர உதவும்படி போலந்து நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

போலந்து நாட்டைச் சேர்ந்தவர் அலிக்ஜா வனாட்கோ. இவர் தனது தாய் மார்த்தா கோட்லார்ஸ்கா-வுடன் கோவாவில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார்.

ஆனால், விசா காலம் முடிந்த பின்னரும் இந்தியாவில் தங்கியதாக தாய் மார்த்தா கோட்லர்ஸ்கா நாடு கடத்தப்பட்டார்.

இதன் பின்னர் மகளையும் தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று தாய் கோரிக்கை விடுத்ததால், சிறுமியை அழைத்து செல்ல தாய்க்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி சிறுமி அலிக்ஜா தனது தாயுடன் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், மோடியின் அரசு மீண்டும் 2-வது முறையாக பதவியேற்றுக் கொண்ட நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவித்த அந்த சிறுமி தான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், தான் கோவாவை மிகவும் நேசிப்பதகாவும் மீண்டும் அங்கு செல்ல உதவுமாறும் எழுதியிருந்தார்.

மேலும் தான் அங்கு விலங்கு மீட்பு மையத்தில் இணைந்து தன்னார்வ தொண்டு செய்து வந்தேன். அதனை தற்போது செய்ய முடியாமல் வருந்துகிறேன் என்றும் எழுதியிருந்தார்.

சிறுமி எழுதிய கடிதம்

மேலும் தாயுடன் அங்குள்ள கேதர்நாத் கோவிலுக்கு சென்று வந்த அனுபவம் குறித்தும், இருவரின் விசா கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பதால் அதனை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு மட்டுமின்றி புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெய்சங்கருக்கும் சிறுமி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தினை அவரது தாய் மார்த்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... மத்திய அமைச்சரானார் தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர்!

Also see...


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Also see...


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

First published:

Tags: PM Modi, Poland