Home /News /international /

நிலச்சரிவில் இருந்து தப்பிக்க பிரிட்ஜிக்குள் ஒளிந்த சிறுவன்.. அடுத்து என்ன நடந்தது?

நிலச்சரிவில் இருந்து தப்பிக்க பிரிட்ஜிக்குள் ஒளிந்த சிறுவன்.. அடுத்து என்ன நடந்தது?

காட்சி படம்

காட்சி படம்

பிலிப்பைன்ஸை சேர்ந்த 11 வயது சிறுவனின் துரிதமாக சிந்திக்கும் திறன் அவனது உயிரை நிலச்சரிவில் இருந்து காக்க உதவியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் லேய்ட் மாகாணத்தில் வீசிய மெகி புயலால் கனமழையும், வெள்ளமும், நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல கட்டிடங்கள், வீடுகள் இடிந்தன. சாலைகள் சேதமடைந்தன. கடந்த வெள்ளிக்கிழமை பேபே நகரில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அப்பகுதி முழுவதும் மழை வெள்ளத்தால் உருவான சேற்றில் மூழ்கியது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு படை வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பேபே நகரில் ஆற்றங்கரை ஓரத்தில் மண்ணில் லேசாக புதைந்தபடி கிடந்த குளிர்சாதன பெட்டி ஒன்று தீயணைப்பு வீரர்களின் கண்ணில் பட்டுள்ளது. அதனை திறந்து பார்த்த தீயணைப்பு வீரர்கள் அதனுள் 11 வயது சிறுவன் உயிருடன் இருப்பது கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுவன் பெயர் சிஜே ஜாஸ்மே என்பது அவனிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீடிரென பலத்த காற்று வீசியதால் அச்சமடைந்த சிறுவன், உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பிரிட்ஜிக்குள் சென்று ஒளிந்து கொண்டுள்ளார். அப்பகுதி முழுவதும் நிலச்சரிவில் சிக்கிய நிலையில், சிறுவன் பிரிட்ஜிக்குள் இருந்ததால் பத்திரமாக உயிர் தப்பியுள்ளார். சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக சிறுவன் பிரிட்ஜிக்குள் இருந்ததால் மீட்கப்பட்டது முதல் மருத்துவமனைக்குச் செல்லும் வரையிலும் தனக்கு பசிப்பதாக தீயணைப்புத்துறையினரிடம் தொடர்ந்து சொல்லியுள்ளார். மேலும் தீயணைப்பு வீரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அளவிற்கு சிறுவன் சுயநினைவுடன் இருந்துள்ளார்.

மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், நிலச்சரிவின்போது ஃப்ரிட்ஜ் உருண்டு புரண்டதில் அவரது கால் மட்டும் உடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உடைந்த காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

also read : திருமண விருந்தில் எச்சில் துப்பி ரொட்டி சுட்ட சமையல்காரர்... அதிர்ச்சி தரும் வீடியோ


இந்த நிலச்சரிவில் சிக்கிய சிஜே ஜாஸ்மேவின் 13 வயது சகோதரர் ஒருவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஆனால் சிஜே-வின் தாய் மற்றும் தம்பி பற்றி எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் மற்றொரு நிலச்சரிவில் சிறுவன் சிஜே ஜாஸ்மே தனது தந்தையை பறிகொடுத்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது.

also read : பாரம்பரிய முறையில் IT அலுவலகம்.. அசத்தும் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 172 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர். சேறும், குப்பைகளும் அதிகமாக இருப்பதால் காணாமல் போனவர்களை தேடும் பணியிலும், மீட்பு பணியிலும் தோய்வு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறை மற்றும் ராணுவத்துடன் இணைந்து பிற துறையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.



பிரிட்ஜுக்குள் புகுந்து உயிர் தப்பிய சிறுவன் சிஜே பற்றிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கணப்பொழுதில் துணிச்சலாக முடிவெடுத்து உயிரைக் காப்பாற்றிக் கொண்ட சிறுவனை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளிப்புயலால் சுமார் 10 ஆயிரம் கிராமங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Trending

அடுத்த செய்தி