அன்னை தெரேசாவின் 109-வது பிறந்தநாள்: கொல்கத்தா ‘அன்னை இல்லத்தில்’ நினைவாஞ்சலி!

அன்னை தெரேசாவுக்கு 1979-ம் ஆண்டு அமைத்திக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அன்னை தெரேசாவின் 109-வது பிறந்தநாள்: கொல்கத்தா ‘அன்னை இல்லத்தில்’ நினைவாஞ்சலி!
அன்னை தெரேசா
  • News18
  • Last Updated: August 26, 2019, 10:33 AM IST
  • Share this:
அன்னை தெரேசாவின் 109-வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் உள்ள ‘அன்னை இல்லத்தில்’ கன்னியாஸ்திரிகள் பலரும் இணைந்து நினைவு அஞ்சலி செலுத்தினர்.

1910-ம் ஆண்டு மசிடோனியாவில் அல்பானிய குடும்பத்தில் பிறந்தவர் அன்னை தெரேசா. தனது 18-வது வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி அயர்லாந்தில் உள்ள கிறிஸ்துவ சபை இணைந்து சேவையாற்றத் தொடங்கினார். அவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்சா பொஜாயூ என்றாலும் பொது நலனுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து உலக மக்களுக்கு அன்னை தெரேசா ஆனார்.

1920-களில் இந்தியாவுக்கு வந்த அன்னை தேரேசா கொல்கத்தாவில் உள்ள செயிண்ட் மேரிஸ் பள்ளியில் வரலாறு மற்றும் புவியியல் ஆசிரியராக 15 ஆண்டுகள் பணியாற்றினார். 1948-ம் ஆண்டு பள்ளி தேவாலயத்தைவிட்டு வெளியேறியவர் ஏழை, எளிய மக்களுக்கு உதவத் தொடங்கினார்.


1950-ம் ஆண்டு ’மிஷனரி அறக்கட்டளை’ ஒன்றைத் தொடங்கியவர் ஏழை மக்களுக்கு உதவே தன் வாழ்வை அற்பணிக்கத் தொடங்கினார். அன்னை தெரேசாவுக்கு 1979-ம் ஆண்டு அமைத்திக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் பார்க்க: அமேசான் காடுகளில் வரலாறு காணாத தீ..!
First published: August 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading