’சிங்கிளா இருங்க... அரோக்கியமா இருக்கலாம்’- 107 வயது லூயிஸ் சொல்லும் லைஃப் சீக்ரெட்!

அளவான ஆரோக்கியமான உணவுடன் தினமும் நடனம் ஆடுவதே தனக்கு மிகப்பெரும் பலத்தை அளிப்பதாகக் கூறுகிறார்.

Web Desk | news18
Updated: August 2, 2019, 5:44 PM IST
’சிங்கிளா இருங்க... அரோக்கியமா இருக்கலாம்’- 107 வயது லூயிஸ் சொல்லும் லைஃப் சீக்ரெட்!
லூயிஸ் சயனோர்
Web Desk | news18
Updated: August 2, 2019, 5:44 PM IST
அமெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் சயனோர் என்ற மூதாட்டி தனது 107-வது பிறந்தநாளைக் கடந்த புதன்கிழமை கொண்டாடியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1912-ம் ஆண்டு பிறந்தவர் லூயிஸ் சயனோர். இளம் வயதிலிருந்தே நடனத்தின் மீது தீராக் காதல் கொண்டு வளர்ந்தவர் இன்று வரையில் தினமும் தனது நடனப் பயிற்சியைத் தொடர்ந்து வருகிறார். நடனம், ஆரோக்கிய உணவு மட்டும் அல்லாது இன்னொரு சீக்ரெட்டும் தனது நீண்ட ஆயுளுக்குக் காரணம் என்கிறார் லூயிஸ்.

”எனது நீண்ட ஆரோக்கிய வாழ்வுக்குக் காரணமே நான் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதுதான். சிறு வயதிலிருந்தே நண்பர்கள் உடன் ஆடிப்பாடி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். சொந்தங்களும் எனக்குத் துணையாக இருக்கிறார்கள்” என்கிறார் லூயிஸ்.

வயோதிகத்தில் வரும் பிரச்னைகளான கண் பார்வை மங்குதல், உயர் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னைகள் லூயிஸ்-க்கும் உள்ளது. ஆனாலும் அளவான ஆரோக்கியமான உணவுடன் தினமும் நடனம் ஆடுவதே தனக்கு மிகப்பெரும் பலத்தை அளிப்பதாகக் கூறுகிறார்.

மேலும் பார்க்க: யூட்யூப்பில் பணம் சம்பாதித்து 55 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கிய 6 வயது சிறுமி!

 
First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...