Home /News /international /

சாதிக்க வயது தடையல்ல... 102 வயதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி சாதித்த முதியவர்!

சாதிக்க வயது தடையல்ல... 102 வயதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி சாதித்த முதியவர்!

sawang

sawang

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சவாங் ஜன்ப்ராம் என்பவரே இந்த சாதனைக்கு சொந்தக்காரர்

    உலக அளவில் ஓட்டப்பந்தயம் என்றாலே நம் மனதில் உடனடியாக நினைவுக்கு வருபவர் உசேன் போல்ட். கடந்த 2009ம் ஆண்டில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை இவர் 9.58 நொடிகளில் கடந்து சாதனை படைத்தார். இது வரையிலும் இந்த சாதனையை யாராலும் முறியடிக்கவில்லை.

    அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற பல வீரர்கள், ஏறக்குறைய உசேன் போல்டின் சாதனையை நெருங்கி வந்தாலும், ஒருவர் கூட அவரை முறியடிக்கவில்லை.

    நிலைமை இப்படியிருக்க, உசேன் போல்ட் எடுத்துக் கொண்ட நேரத்தை விடவும் சுமார் 3 மடங்கு நேரத்தில் 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தை ஓடி கடந்தவரை இன்றைய இணைய உலகம் கொண்டாடி வருகிறது. அதாவது, 100 மீட்டர் தொலைவை கடக்க 27.08 நொடிகளை எடுத்துக் கொண்ட ஒருவரை உலகம் பாராடுகிறது என்றாள் நம்ப முடிகிறதா?

    பிச்சை எடுத்து வாழ்ந்த பெண் இறந்த பிறகு குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி!


    பராம்பரிய விளையாட்டு வீரர் :

    தன் வாழ்நாளின் பெரும் பகுதியை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று கழித்தவர் சவாங் ஜன்ப்ராம். தாய்லாந்தில் நடைபெறும் வருடாந்திர மாஸ்டர் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 4 முறை இவர் பங்கேற்றுள்ளார். குறிப்பாக 100 மீட்டர் ஓட்டம், ஜாவ்லின் த்ரோ மற்றும் டிஸ்கஸ் த்ரோ ஆகிய போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார்.

    கடந்த வாரத்தில் 26ஆவது சாம்பியன்ஷிப் போட்டிகள் தாய்லாந்தின் சமுத் சோங்கிராம் மாகாணத்தில் நடைபெற்றது. 100 - 105 வயது வரையிலான பிரிவினருக்கு நடத்தப்பட்ட அனைத்து தடகளப் போட்டிகளிலும், சக போட்டியாளர்களை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார் சவாங் ஜன்ப்ராம்.

    வெற்றியின் ரகசியம் :

    நீண்ட ஆயுள் மற்றும் வெற்றிக்கான ரகசியம் குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதுதான் என்னை வலுவானவராக மாற்றுகிறது. அதுமட்டுமல்லாமல், உடற்பயிற்சி செய்யும்போது உங்களுக்கு பசி அதிகரிக்கும். ஆகவே, நீங்கள் நன்றாக சாப்பிட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

    sawang


    சவாங் தினசரி தனது 70 வயது மகள் சிரிபானுடன் நடைபயிற்சி செய்கிறார். வீட்டுத் தோட்டத்தில் உதிர்ந்து விழும் இலைகளை கூட்டி பெருக்குவது உள்பட சின்ன, சின்ன வீட்டு வேலைகளையும் அவர் செய்கிறார்.

    தனது தந்தை எப்போதுமே நேர்மறையாக சிந்திப்பவர் என்றும், ஆகவே தான் அவரது உடல் நலனும், மன நலனும் பலமாக இருக்கிறது என்றும் மகள் சிரிபான் தெரிவிக்கிறார்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    அடுத்த செய்தி