100 ஆண்டுகளில் 3-வது முறையாக தென்பட்ட உலகின் பெரிய திமிங்கலம்.. மெய்சிலிர்த்த தருணத்தைப் பகிரும் புகைப்படக் கலைஞர்.. (வீடியோ)

அதன் எடையைப் பற்றி கூற வேண்டுமென்றால், ‘அதன் நாக்கு மட்டுமே ஒரு யானையின் எடை இருக்கும். அதன் இதயம் ஒரு காரின் எடைக்கு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

100 ஆண்டுகளில் 3-வது முறையாக தென்பட்ட உலகின் பெரிய திமிங்கலம்.. மெய்சிலிர்த்த தருணத்தைப் பகிரும் புகைப்படக் கலைஞர்.. (வீடியோ)
சிட்னி கடற்கரை திமிங்கலம்
  • News18 Tamil
  • Last Updated: September 6, 2020, 11:56 AM IST
  • Share this:
ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி அருகேவுள்ள கடற்கரை பகுதியில் நீலநிற திமிங்கலம் ஒன்று வெளிப்பட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்த நீலநிற திமிங்கலம் தென்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2002 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் கேப் சோலேண்டர் பகுதியில் நீலநிற திமிங்கலத்தை பார்த்ததாக கடல்வாழ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நீலத் திமிங்கலம் 100 டன் எடைக்கும் அதிகமானது என ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

சிட்னி கடற்கரை திமிங்கலம்முன்பு இரண்டு முறையும் ஆதாரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இந்த முறை புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டு விஷயம் இந்த படம் பரவலாக பரவி புகழ்பெற்று வருகிறது. இந்த நீலநிற திமிங்கலம் உலகிலேயே மிகப்பெரிய உயிரினம் என்று கருதப்படுகிறது. இதனை சிட்னியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் சியான் கே என்பவர் படம்பிடித்துள்ளார்.
கடலின் மேல்புறத்தில் இருந்தவாறே படம்பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எந்த இடத்தில் படம்பிடிப்பது என்றே தெரியவில்லை. எனக்கு அந்த நொடி பேசவும் முடியவில்லை. ஒரேநேரத்தில் லட்சக்கணக்கான விஷயங்கள் தோன்றி மறைந்ததைப் போல் இருந்தது. வழக்கமான எனது வேலை ஒன்றுக்காக மரவுபிராவில் தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தேன்' என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதன் எடையைப் பற்றி கூற வேண்டுமென்றால், ‘அதன் நாக்கு மட்டுமே ஒரு யானையின் எடை இருக்கும். அதன் இதயம் ஒரு காரின் எடைக்கு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

 
First published: September 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading