இலங்கையில் நிதிப் பற்றாக்குறை காரணத்தினால் உள்ளாட்சித் தேர்தலை ஒதுக்கி வைக்கும் நிலை நிலவி வருகிறது. இதனைக் கண்டித்தும், உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தி தலைநகர் கொழும்புவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைநகரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே இலங்கையில் மார்ச் 9ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் நிதிப் பற்றாக்குறை காரணமாகத் தேர்தல் நடத்த நிதி ஒதுக்க முடியாத சூழல் நிலவி வருவதாகவும், இதனால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதைக் கண்டித்து எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தலைநகர் கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்புவின் முக்கிய வணிக பகுதியை நோக்கி பேரணியாக சென்றனர். பேரணியாகச் சென்றவர்களைத் தடுத்து நிறுத்திய இலங்கை போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் அவர்களைக் கலைக்க முயன்றனர்.
Also Read : அமெரிக்காவில் விமான ஆம்புலன்ஸ் நொறுங்கி விபத்து - பயணித்த 5 பேர் பலி..!
இதில் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் இலங்கை தலைநகரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் மக்கள் போராட்டம் பெரியளவில் வெடித்தது. அதனால் மக்கள் பெரும் அவதியடைந்த நிலையில் தற்போது மீண்டும் மக்கள் தலைநகரின் வீதியில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.