ஸ்காட்லாந்து தீவில் கரை ஒதுங்கிய இளம் ஆண் திமிங்கலத்தின் வயிற்றில் இருந்த பொருட்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பூமிப்பந்தின் 71 சதவீத இடத்தினை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது இந்த கடல். அதன் பரந்துப்பட்ட இடத்திற்கு ஏற்பவே தன்னுள்ளே பல்வேறு சுவாரஸ்யங்களை புதைத்து வைத்திருக்கிறது. ஆய்வு முடிவுகளின் படி பூமியில் வாழும் 94 சதவீத உயிரினங்கள் கடல் வாழ் உயிரினங்கள் என்றும், அதில் மூன்றில் ஒரு சதவீதத்தை மட்டுமே நாம் அடையாளம் கண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பவளப்பாறைகள், கடல் பாசிகள், கடல் புற்கள் என 1500க்கும் மேற்பட்ட தாவர வகைகளும், 105 அடி வரை வளரக்கூடிய நீலத்திமிங்கலங்கள் முதல் முதுகெலுமில்லாத ஜெல்லி மீன்கள் வரை பல மில்லியன் கணக்கான உயிரினங்கள் வாழ்த்து வருகின்றன. இப்படிப்பட்ட அற்புதங்கள் நிறைந்த கடலை மனித இனமான நாம் மெல்ல, மெல்ல அழித்து வருகிறோம்.
மீன்பிடியின்போது சேதமாகும் வலைகள், கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், காலி மதுபாட்டில்கள், வேண்டுமென்றே கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றால் கடலுக்கு அடியில் வாழும் லட்சக்கணக்கான அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன.
மனிதர்கள் வீசும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்ளும் சுறா, திமிங்கலம் போன்றவை அதனை ஜீரணிக்க முடியாமல் செத்து கரை ஒதுங்கும் காட்சிகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் அரங்கேறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் உயிரினங்களின் வயிற்றை பரிசோதிக்கும் மருத்துவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது.
also read : விண்வெளியின் விளிம்பு வரை செல்ல அரிய வாய்ப்பு.. ராட்சத பலூனில் ஒருமுறை சுற்ற எவ்வளவு செலவு தெரியுமா?
சமீபத்தில் ஸ்காட்லாந்து தீவில் கரை ஒதுங்கிய இளம் ஆண் திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் ஹாரிஸ் தீவில் உள்ள Seilebost கடற்கரையில் ஸ்பெர்ம் வேலின் பிரேத பரிசோதனையின் போது, அதன் வயிற்றுக்குள் பிளாஸ்டிக் கயிறுகள், கையுறைகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் வலைகள் என 100 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் இருந்துள்ளது.
கடல் விலங்குகளின் தரவுகளை சேகரிக்கும் ஒரு அமைப்பான ஸ்காட்டிஸ் மெரைன் அனிமல் ஸ்டேண்டிங் ஸ்கீம் (Scottish Marine Animal Stranding Scheme (SMASS)) என்ற அமைப்பு திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
also read : பெண் பயிற்சியாளரை பலமுறை தாக்கிய டால்பின்.. கேமராவில் சிக்கிய 'திக் திக்' நிமிடங்கள்!
also read : மணமேடையில் மணப்பெண்ணுக்கு மாலை அணிவித்த மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இளம் திமிங்கலத்தின் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பான புகைப்படங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விஞ்ஞானிகள், கடல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மக்களை பேரதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது. "இத்தகைய அற்புதமான உயிரினத்திற்கு, மிக அழகான கடற்கரையில் இப்படியொரு ஒரு சோகமான முடிவா" என பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Plastic pollution, Scotland