ஆசியாவில் பருவநிலை மாற்றத்தால் 2050ம் ஆண்டுக்குள் 100 கோடி பேர் வரை பாதிக்கப்படுவர் - ஆய்வில் தகவல்

ஆசியாவில் பருவநிலை மாற்றத்தால் 2050ம் ஆண்டுக்குள் 100 கோடி பேர் வரை பாதிக்கப்படுவர் - ஆய்வில் தகவல்

கோப்புப்படம்.

ஆசியாவில் பருவநிலை மாற்றத்தால் 2050ம் ஆண்டுக்குள் 100 கோடி பேர் வரை பாதிக்கப்படுவர் என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
பருவநிலை மாற்றத்தால் 2050ம் ஆண்டுக்குள் ஆசியாவில் 100 கோடி பேர் வரை பாதிக்கப்படுவர் என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. மெக்கின்ஸி என்னும் அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கா விட்டால், இந்த பகுதிகளில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் வெப்பநிலை கடுமையாக உயரலாம் என்று எச்சரித்துள்ள அந்நிறுவனம், தென்கிழக்கு ஆசியாவில் நகரமயமாதல் அதிகரித்து வருவதாலும், உலக நாடுகள் சீனாவிலிருக்கும் தங்களது தொழிற்சாலைகளை தென்கிழக்கு ஆசியாவுக்கு மாற்றுவதாலும் அங்கு மேலும் வெப்பநிலை உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: