ஹோம் /நியூஸ் /உலகம் /

சிறுமியின் தொலைந்த பொம்மை சமூகவலைத்தளத்தால் மீண்டும் கிடைத்தது - வைரலான தந்தையின் பதிவு

சிறுமியின் தொலைந்த பொம்மை சமூகவலைத்தளத்தால் மீண்டும் கிடைத்தது - வைரலான தந்தையின் பதிவு

Cowwie toy

Cowwie toy

சிறுமியிடம் 'கௌவி' என்கிற அழகிய மாடு பொம்மை ஒன்று இருந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்லாந்தில் சுற்றுலாவிற்கு சென்றபோது தவறுதலாக அந்த பொம்மையை அங்கே விட்டு வந்துள்ளனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

சமூக ஊடகங்கள் என்றாலே எரிச்சல் தரும் அளவுக்கு மோசமான அனுபவத்தை அதில் பெற்றவர்கள் பலர். ஆனால் இந்த சமூக ஊடகங்களின் வழியாக பல நன்மைகள் நடந்த வரலாறுகளும் உள்ளது. சமூக ஊடகத்தை பயன்படுத்தி யாருக்காவது அவசர உதவி தேவைப்பட்டால் அதில் பகிர்ந்து உடனே உதவி பெற முடியும், இழந்த பள்ளி பருவத்து நண்பர்களுடன் இணைய முடியும், தொலைந்து போனவர்களை கண்டுபிடிக்க முடியும்... இப்படி சில நல்ல விஷயங்களையும் சமூக ஊடகங்களின் மூலம் செய்ய முடிகிறது.

இப்படியொரு நெகிழ்ச்சியான சம்பவம் தான் முகநூலில் நடந்துள்ளது. லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் சைன்ஸ் என்பவருக்கு ஹட்டி என்கிற 10 வயது மகள் உள்ளார். இந்த சிறுமியிடம் 'கௌவி' என்கிற அழகிய மாடு பொம்மை ஒன்று இருந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்லாந்தில் சுற்றுலாவிற்கு சென்றபோது தவறுதலாக அந்த பொம்மையை அங்கே விட்டு வந்துள்ளனர். அதன் பிறகு இவர்கள் லண்டனுக்கு திரும்பி உள்ளனர். தனது மாடு பொம்மை தொலைந்து போனதை அறிந்த இந்த சுட்டி சிறுமி இதனால் எப்போதும் சோகமாக இருந்துள்ளார்.

இதை அறிந்து கொண்ட ரிச்சர்ட் தனது மகளின் மாடு பொம்மையை எப்படியாவது மீண்டும் கொண்டு வர எண்ணி பல்வேறு முயற்சிகளை செய்துள்ளார். ஆனால், ஐஸ்லாந்தில் இருந்த அந்த சுற்றுலா தளத்திற்கு சென்று, அந்த பொம்மையை கொரியர் சர்வீஸ் பெற்று கொள்ள இயலவில்லை. இதன் பிறகு இரண்டு மாதங்களாக எதை எதையோ செய்து தன் மகளை சந்தோஷப்படுத்த முயற்சித்துள்ளார். ஆனால் ஹட்டிக்கு தனது மாடு பொம்மையின் மீது மட்டும் தான் நினைவு இருந்து வந்துள்ளது.

தன் மகள் எப்போதும் சோகமாக இருப்பதை கண்டு எப்படியாவது அந்த மாடு பொம்மையை தன் மகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக, ரிச்சர்ட் இதை பற்றி தன் முகநூலில் பதிவிட்டுள்ளார். இதில் அந்த மாடு பொம்மையின் அழகிய புகைப்படங்களையும் சேர்த்திருந்தார். இந்த பதிவை படித்த பலரும் சுட்டி சிறுமி ஹட்டியிடம் அந்த பொம்மையை கொண்டு வந்து சேர்த்து விடுகிறோம் என்று கமெண்ட் செய்திருந்தனர்.

Also read:  தந்தையிடம் ரூ.75 லட்சம் வரதட்சணை வாங்கி மணமகள் செய்த செயலை பாருங்க

ஐஸ்லாந்தின் அந்த கேம்ப் பகுதியில் இருந்து லண்டனுக்கு திரும்பி வரவுள்ள பலர், பொம்மையை தாங்களே கொண்டு வந்து சேர்த்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர். ஒருவழியாக நெட்டிசன்களின் முயற்சியால் அந்த அழகிய மாடு பொம்மை ஹட்டியிடம் வந்து சேர்ந்தது. இந்த பொம்மை ஐஸ்லாந்தில் இருந்து லண்டனுக்கு வந்த புகைப்படங்கள் அனைத்தையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

தனது அன்பு மகளிடம் பொம்மையை கொண்டு வந்து சேர்த்த நெட்டிசன்களை பாராட்டி, தனது நன்றியை முகநூலில் மீண்டும் ஒரு பதிவாக ரிச்சர்ட் எழுதியுள்ளார். "சமூக ஊடகங்களில் உள்ள பாதகமான விஷயங்களை மட்டுமே நாம் அதிகம் கவனம் செலுத்துகிறோம். ஆனால் இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் கொண்ட மனிதர்களும் சமூக ஊடகங்களில் உள்ளார்கள். இவர்கள் பிறருக்கு உதவவும் தயாராக உள்ளார்கள்" என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Published by:Arun
First published:

Tags: Facebook, Trending