Home /News /international /

2022 ஹஜ் பயணத்திற்கு 10 லட்சம் பேருக்கு அனுமதி - சவுதி அரசு அறிவிப்பு

2022 ஹஜ் பயணத்திற்கு 10 லட்சம் பேருக்கு அனுமதி - சவுதி அரசு அறிவிப்பு

புனித மெக்கா மசூதி - சவுதி அரேபியா

புனித மெக்கா மசூதி - சவுதி அரேபியா

புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் 65 வயதுக்கு குறைவானவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் கோவிட் தடுப்பூசியை முழுமையாக செலுத்தியிருக்க வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில், இந்தாண்டு ஹஜ் பயணத்தை 10 லட்சம் மேற்கொள்ள சவுதி அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 10 லட்சம் பேருக்கு இந்தாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் 65 வயதுக்கு குறைவானவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் கோவிட் தடுப்பூசியை முழுமையாக செலுத்தியிருக்க வேண்டும். மேலும், பயணத்திற்கு வருவதற்கு 72 மணிநேரத்திற்கு முன் கோவிட்-19 பரிசோதனை செய்து, அதில் தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக ஹஜ் பயணிகளுக்கு சவுதி அரேபிய அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. 2020ஆம் ஆண்டு ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு 60,000 பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையும் படிங்க - ரூ.600க்கு கோவிஷீல்டு பூஸ்டர் தடுப்பூசி கிடைக்கும் - அதார் பூனாவாலா அறிவிப்பு
தற்போது கோவிட் பரவல் அந்நாட்டில் வெகுவாக குறைந்துள்ளதை அடுத்து, சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை சவுதி அரசு தளர்தியுள்ளது. திறந்த வெளிகளில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை எனவும், உள்ளரங்குகளில் மட்டும் முக கவசம் அணிய வேண்டும் எனவும் அந்நாடு உத்தரவிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் இதுவரை 7.51 லட்சம் கோவிட் பாதிப்பும், 9,055 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இஸ்லாமியர்களின் ஐந்து அடிப்படை கடமைகளில் ஹஜ் பயணம் ஒன்றாகும்.

இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது அவர்கள் நம்பிக்கையின் படி அவசியமாகும். ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் பேர் ஹஜ் பயணத்திற்காக சவுதி அரேபியா செல்வது வழக்கம்.

இதையும் படிங்க - பொருளாதார நெருக்கடி: இலங்கையில் ஒரே நாளில் 119.08 பில்லியன் ரூபாய் அச்சடிப்பு!
இந்தாண்டு ஹஜ் பயணம் ஜூலை மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மத்திய சிறுபான்மை நல அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும்.

இந்தியாவிருந்து 2022ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கான விண்ணப்பம் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் பெறப்பட்டது.

பயணம் மேற்கொள்பவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு மேற்கொள்ளும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
Published by:Musthak
First published:

Tags: Haj, Ramzan

அடுத்த செய்தி