முகப்பு /செய்தி /உலகம் / சீன புத்தாண்டு கொண்டாட்டம்.. கூட்டத்தில் நுழைந்த மர்ம நபர்... துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி..!

சீன புத்தாண்டு கொண்டாட்டம்.. கூட்டத்தில் நுழைந்த மர்ம நபர்... துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி..!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaWashingtonWashington

சீனா தனது பாரம்பரிய முறைப்படி நிலவை அடிப்படையாகக் கொண்டு Lunar New Year என ஆண்டுதோறும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். அதன்படி, உலகம் முழுவதும் உள்ள சீனர்கள் இந்த புத்தாண்டை நேற்று (ஜனவரி 22) உற்சாகமாகக் கொண்டாடினர்.

அதன்படி, கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள நடன அரங்கில் புத்தாண்டையொட்டி இரண்டு நாட்கள் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதில், 5 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாள் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டு 20 முதல் 30 நிமிடங்களுக்குப் பிறகு அல்ஹம்ப்ரா அருகே உள்ள அரங்குக்குள் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்ததாகவும், எனினும் தாக்குதல் நடத்த முடியாமல் அங்கிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இரண்டு நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும், சாலையில் சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டிருந்த வேன் ஒன்றை சுற்றிவளைத்து சோதனை நடத்தினர்.அதில் இருந்த நபர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து பின்னர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.

ஒருவேளை இவர் தான் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நடத்திய குற்றவாளியா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ஆசிய கண்டத்தை சார்ந்தவர் எனவும் அவரது வயது 30 இல் இருந்து 55 வயது இருக்கலாம் என கலிஃபோர்னியா காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், சந்தேகத்திற்குரிய நபரின் புகைப்படங்களையும் வெளியிட்டு பொதுமக்களை அடையாளம் காட்ட கோரியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Gun shoot, Shooting, Us shooting, USA