• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பருவநிலை மாற்றத்தை சமாளிக்க ஒரு பில்லியன் டாலர் வழங்கியது அமெரிக்கா

பருவநிலை மாற்றத்தை சமாளிக்க ஒரு பில்லியன் டாலர் வழங்கியது அமெரிக்கா

  • News18
  • Last Updated :
  • Share this:
    வளரும் நாடுகள் பருவநிலை மாற்றத்தை சமாளிக்க அமெரிக்க அரசு ஒரு பில்லியன் டாலர்க்கும் அதிகமான நிதியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புவி வெப்பமாவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், இன்னும் 4 ஆண்டுகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு, காட்டுத்தீ, கடுமையான வறட்சி உணவு பற்றாக்குறை ஆகிய பிரச்சனையை உலகம் சந்திக்க நேரிடும் என்று ஐ.நாவின் ஐபிசிசி பருவநிலை மாற்றத்தை கண்காணிக்கும் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 4 நாட்களாக பஹ்ரைனில் நடந்து வந்த மீட்டிங்கில் பசுமை பருவநிலை நிதிக்காக (Green Climate Fund) அதிகாரிகள் ஆரம்ப மூலதனமாக 6.6 பில்லியன் டாலரை விரைவில் பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர். தென்கொரியாவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வளர்ச்சி திட்டத்திற்கு தென்கொரியா வளர்ந்த பணக்கார நாடுகளிடமிருந்து 10 பில்லியன் டாலரைப் பெற திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை 19 காலநிலை மாற்றத் திட்டங்களுக்கு செலவிட ஒதுக்கியுள்ளது.

    மனாமாவில் நடந்த கூட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் இந்தோனேசியாவில் புவி வெப்பசக்தி குறித்த திட்டமும், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் பசுமையான நகரங்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு தொடர்புடைய திட்டங்களும் அடங்கும். பஹ்ரைனில் குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்க அந்நாடு நிதியை பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வளைகுடா நாடுகள் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வருமானத்தைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் குறித்த திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கிட முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த திட்டத்திற்கு 9.8 மில்லியன் டாலர் தேவைப்படும் என்ற நிலையில் 2.1 மில்லியன் மட்டுமே தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.

    நிதி ஒதுக்கீட்டில் மேற்கத்திய நாடுகளுக்கும் சீனா, எகிப்து மற்றும் சவுதி அரேபியா போன்ற வளரும் நாடுகளுக்கும் இடையே விவாதங்கள் எழுவது வழக்கமே. மேலும் நிதி மேலாண்மை செய்யும் இயக்குநர் ஹாவர்டு பம்ஷே பதவி விலகிய நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பலரும் இந்த கூட்டம் மிகவும் ஏமாற்றத்தை அளித்ததாக கூறினார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Saroja
    First published: