Home /News /india-china /

மருத்துவ படிப்பில் இளைஞர்களின் வாய்ப்பு பறிபோவதா? வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும்.. கல்வியாளர்கள் கோரிக்கை!!

மருத்துவ படிப்பில் இளைஞர்களின் வாய்ப்பு பறிபோவதா? வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும்.. கல்வியாளர்கள் கோரிக்கை!!

மருத்துவ படிப்புக்கு அடிப்படையான நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு நீதிமன்ற உத்தரவின் படி நீக்கப்பட்டுள்ளதால், 60 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுதும் நிலை ஏற்படுகிறது.

மருத்துவ படிப்புக்கு அடிப்படையான நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு நீதிமன்ற உத்தரவின் படி நீக்கப்பட்டுள்ளதால், 60 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுதும் நிலை ஏற்படுகிறது.

மருத்துவ படிப்புக்கு அடிப்படையான நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு நீதிமன்ற உத்தரவின் படி நீக்கப்பட்டுள்ளதால், 60 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுதும் நிலை ஏற்படுகிறது.

    மருத்துவ படிப்பில் இளைஞர்களின் வாய்ப்பு பறிபோவதை தடுக்கும் விதமாக நீட் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பை உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின் மூலம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மருத்துவ படிப்பில் சேர நீட் தகுதி தேர்வாக அமைந்துள்ளது. அந்த தேர்வை எழுத வயது தேசிய தேர்வு முகமையால் நிர்ணயிக்கப்பட்ட வயது உச்சவரம்பு நீதிமன்ற உத்தரவினால் நீக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில், தருமபுரி மாவட்டம் இந்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி, கடந்த 2020-ம் ஆண்டு ஓய்வு பெற்ற 61 வயதான சிவபிரகாசம் தனது மருத்துவ கனவை நனவாக்க முயன்றார்.

    விலங்கியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்ற அவர், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி 249 மதிப்பெண்கள் எடுத்தார். இதன்மூலம், தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற அவர், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்க வந்தார்.

    அப்போது, கன்னியாகுமரியில் பயிற்சி மருத்துவராக உள்ள அவரது மகன் செல்போனில் தொடர்பு கொண்டு, உங்களால் ஒரு இளைஞரின் மருத்துவ கனவு பறிபோகக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: அரிசி ஆலைகளால் கண்பார்வை, ஆஸ்துமா பாதிப்பு: மதுரை சூசைப்பர் பகுதி மக்கள் வேதனை

    இதற்கிடையே, மருத்துவம் படிக்க 10 மற்றும் 12-ம் வகுப்பு தகுதியாக உள்ள நிலையில், சிவபிரகாசம் பியூசி மட்டும் படித்துள்ளதால் அவர் மருத்துவ படிப்பில் சேர முடியாது என்று கலந்தாய்வு செயலாளர் வசந்தாமணி தெரிவித்துள்ளார். இதனால், சிவபிரகாசம் தனது மருத்துவ இடத்தை மற்றொரு மாணவருக்கு வழங்கும்படி கூறிவிட்டு சென்றார்.

    மருத்துவ படிப்புக்கு அடிப்படையான நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு நீதிமன்ற உத்தரவின் படி நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓய்வு பெற்றவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுதும் நிலை ஏற்படுகிறது.

    ஒரு இளைஞர் மருத்துவரானால் அவர் பல ஆண்டு காலம் மருத்துவ சேவை வழங்க முடியும். ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டோர் எம் பி பி எஸ் முடித்து அதன் பின் மேற்படிப்பும் படித்து வருவது சாத்தியமாகாது. எனவே நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது வரம்பு 17 எனவும் , வயது உச்சவரம்ப்ய் பொது பிரிவினருக்கு 25 எனவும் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 30 எனவும் நிர்ணயித்து நீீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு பெற்றிடவும் தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறுகிறார்.

    இதையும் படிங்க: பாழடைந்து போன வேலுநாச்சியார், மருது சகோதரர்களின் போர் பயிற்சிக்கூடம்

    பொது மருத்துவ படிப்பு மத்திய சட்டத்தின் படி மருத்துவம் சேர விரும்பும் நபர் இரண்டு ஆண்டுகள் உயிரியல், இயற்பியல், வேதியியல் படித்திருக்க வேண்டும் என்று கூறுகிறது.

    நீட் தேர்வுக்கான வயது உச்சவரம்பு குறித்த வழக்கு மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதை உடனே தீர்த்து வைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உச்சவரம்பே இல்லாத ஒரே தேர்வு நீட் மட்டுமே.

    இளைஞர்களின் ஆசைகளுக்கு வழி கொடுக்கும் வகையில் உரிய மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறுகிறார்.

    மக்களுக்கான மருத்துவ சேவை வழங்க உருவாக்கப்படும் மருத்துவ இடங்கள், அதற்காக செய்யப்படும் செலவு ஆகியவை முழு பலனை சமூகத்துக்கு தர இளைஞர்களுக்கே வாய்ப்பு அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Neet, Neet Exam

    அடுத்த செய்தி