இந்தியாவுக்கு சொந்தமான நிலத்தை சீனாவுக்கு மோடி அளித்தது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி

இந்தியாவுக்கு சொந்தமான நிலத்தை சீனாவுக்கு மோடி அளித்தது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி

ராகுல் காந்தி

இந்தியப் படைகள் பாங்காங் சோ ஏரி பகுதியில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டு finger-3 பகுதியில் நிலை நிறுத்தப்படுவார்கள் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மாநிலங்களவையில் நேற்று அறிவித்தார்.

  • Share this:
இந்தியாவின் சில பகுதிகளை பிரதமர் மோடி, சீனாவுக்கு அளித்துவிட்டதாக பகீர் குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முன்வைத்துள்ளார்.

இந்தியா - சீனா இடையே நிலவும் போர்ப் பதற்றத்தை குறைக்க இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், எல்லையில் படைகளை விலக்கிக்கொள்ள முடிவு எட்டப்பட்டது. இந்தியப் படைகள் பாங்காங் சோ ஏரி பகுதியில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டு finger-3 பகுதியில் நிலை நிறுத்தப்படுவார்கள் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மாநிலங்களவையில் நேற்று அறிவித்தார்.

இதனை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்தியாவுக்கு சொந்தமான finger 4 பகுதியில் இருந்து இந்தியா பின்வாங்கி finger 3 பகுதிக்கு சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவுக்கு சொந்தமான நிலத்தை சீனாவுக்கு மோடி அளித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ள ராகுல் காந்தி, இதற்கு நாட்டு மக்களுக்கு மோடி பதிலளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் முக்கிய சமவெளியான தேப்சாங் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே பிரதமர் மீதான ராகுல்காந்தியின் விமர்சனத்திற்கு காட்டமாக பதில் அளித்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, இந்தியாவின் நிலப்பரப்பை சீனாவிற்கு யார் விட்டுக் கொடுத்தது என்று ராகுல்காந்தி தனது தாத்தாவான ஜவஹர்லால் நேருவிடம் கேட்டால் அதற்கு பதில் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார். தேசபக்தர் யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: