Home /News /india-china /

ராணுவ வீரர்களிடம் திருக்குறளை மேற்கோள்காட்டிய பிரதமர் மோடிக்கு, திருக்குறள் சொல்லும் கவிஞர் வைரமுத்து...

ராணுவ வீரர்களிடம் திருக்குறளை மேற்கோள்காட்டிய பிரதமர் மோடிக்கு, திருக்குறள் சொல்லும் கவிஞர் வைரமுத்து...

பிரதமர் மோடி - வைரமுத்து

பிரதமர் மோடி - வைரமுத்து

லடாக்கில் ராணுவ வீர்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியதற்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரவித்துள்ளார்.

    இந்தியா - சீன இடையே லடாக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் போதும் பிரச்னைக்கு சுமூக நிலைக்கு வரவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி திடீரென லடாக் பயணம் மேற்கொண்டு அங்கு நிலவும் சூழல் குறித்து ஆய்வு நடத்தினார்.

    லடாக்கின் நிம்மு ராணுவ முகாமில் ஆய்வு மேற்கொண்ட அவர் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது. கடும் சவால்களுக்கு மத்தியில் இந்தியாவை நீங்கள் காத்து வருகிறீர்கள்.

    மனித நேயம், அமைதியை இந்தியா விரும்புகிறது. இந்திய ராணுவத்தின் நெருப்பு போன்ற ஆக்ரோசத்தை எதிரிகள் பார்த்துள்ளனர். அமைதியை எதிர்பார்த்தாலும் நமது நிலத்தை பாதுகாக்கும் விவகாரத்தில் அச்சம் கொள்ளப்போவதில்லை நாடு பிடிக்கும் காலம் என்பது மலையேறிச் சென்றுவிட்டது என்றார்.

    பிரதமர் மோடி தனது உரைக்கு நடுவே திருக்குறள் ஒன்றை குறிப்பிட்டு பேசினார.

    ‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
    எனநான்கே ஏமம் படைக்கு’

    என்ற குறளை பிரதமர் மோடி கூறினார். இந்த குரலின் பொருள் "வீரம், மானம், முன்னோர் சென்ற வழியை பின்பற்றி செல்லுதல், தலைவனின் நம்பிக்கையைப் பெற்று நடப்பது ஆகியவை ஒரு படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும் என்பதாகும். இதற்கான அர்தத்தை ஹிந்தியிலும் அவர் விளக்கினார்.

    இதையடுத்து பிரதமர் மோடி திருக்குறளை மேற்கொள் காட்டியதற்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு திருக்குறளையும் மோடிக்காக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



    ‘உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
    சேரா தியல்வது நாடு’

    கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ள திருக்குறளுக்கு பசியும், நோயும், பகையும் இல்லாத நாடுதான் சிறந்த நாடு என்பது பொருளாகும். பதிவிட்டுள்ளார்.

     
    Published by:Vijay R
    First published:

    Tags: China

    அடுத்த செய்தி