எல்லை பாதுகாப்பு தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர். அப்போது லடாக் எல்லை பிரச்னை குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீனப்படைகளுக்கிடையே நிகழ்ந்த மோதலை அடுத்து சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் தளபதிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு தளபதிகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது என்றும், அசாதாரண சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராஜ்நாத்சிங் நாளை அரசுமுறை பயணமாக ரஷ்யா புறப்பட உள்ள நிலையில், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.