Home /News /india-china /

கல்வான் நதியின் போக்கை தடுக்கும் வகையில் அணை கட்டுகிறதா சீனா? செயற்கைக்கோள் புகைப்படத்தால் சர்ச்சை...

கல்வான் நதியின் போக்கை தடுக்கும் வகையில் அணை கட்டுகிறதா சீனா? செயற்கைக்கோள் புகைப்படத்தால் சர்ச்சை...

செயற்கைக்கோள் புகைப்படம்

செயற்கைக்கோள் புகைப்படம்

கல்வான் நதியின் போக்கை தடுக்கும் வகையில், சீனா அணை கட்டும் முயற்சியில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

  • Last Updated :
    லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சீனாவின் இந்த தாக்குதலை தொடர்ந்து எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. லடாக்கின் லே பகுதியில் இந்திய போர் விமானங்கள் தயார் நிலையில் இருப்பதை விமானப்படை தலைமை தளபதி நேரில் ஆய்வு செய்தார்.

    இந்நிலையில் கல்வான் நதிநீரின் போக்கை தடுக்கும் வகையில், சீனா நதியின் குறுக்கே அணை கட்டுவதாக செய்திகள் வெளியாகின. கல்வான் நதி சீனாவில் தொடங்கி காஷ்மீர் வரை பாயும் நீண்ட நதியாகும். இந்த நதிக்கரையை ஒட்டியே கடந்த 15 ஆம் தேதி இந்தியா - சீனா வீரர்கள் இடையே மோதல் வெடித்தது.



    இதுதொடர்பாக கல்வான் நதிப்பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறுவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் இதுதொடர்பாக, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மறுத்து விட்டார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: China

    அடுத்த செய்தி