எல்லையில் போர் விமானங்கள் - குடியரசுத்தலைவர் உடன் பிரதமர் திடீர் சந்திப்பு
எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கண்காணிப்பு பணிகளில் போர்விமானங்களை இந்தியா களமிறக்கியுள்ளது.

குடியரசுத்தலைவர் உடன் பிரதமர் மோடி சந்திப்பு
- News18
- Last Updated: July 6, 2020, 9:04 AM IST
லடாக் மோதலைத் தொடர்ந்து இந்திய - சீன எல்லையில் இருநாடுகளும் படைகளை குவித்து வருகின்றன. எல்லையில் சீனா போர் விமானங்களை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவும் போர் விமானங்களை குவித்து வருகிறது. சுகோய் 30 மற்றும் மிக் 29 ரக போர் விமானங்கள் சீன எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, லடாக் எல்லையில் கண்காணிப்பு பணிக்காக நவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டுள்ளன. அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் அதிவேகமாக ராணுவ முகாம்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை ஆகும்.
இந்நிலையில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது சர்வதேச மற்றும் தேசிய பிரச்னைகள் குறித்து பிரதமர் விளக்கியதாக குடியரசுத்தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. லே பகுதிக்கு சென்று வீரர்களை சந்தித்து திரும்பிய நிலையில் குடியரசுத்தலைவரை பிரதமர் சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
படிக்க: கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்தும் 2021-க்கு முன் பயன்பாட்டுக்கு வராது - மத்திய அரசுபடிக்க: கொரோனா பரவல் குறித்த தகவல்களை சீனா மறைத்ததாக அமெரிக்கா புகார் - சீனா விரைகிறது WHO குழு
இதற்கிடையே, தென்சீன கடல்பகுதியில் சீன ராணுவம் போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் தென்சீன கடல்பகுதிக்கு 2 விமானம் தாங்கி போர் கப்பல்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. சீனா போர்பயிற்சி மேற்கொள்ளும் பகுதியின் அருகிலேயே, அமெரிக்கா போர்பயிற்சி மேற்கொண்டால் அது மோதலை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுவதால், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
அதன்படி, லடாக் எல்லையில் கண்காணிப்பு பணிக்காக நவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டுள்ளன. அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் அதிவேகமாக ராணுவ முகாம்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை ஆகும்.
இந்நிலையில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது சர்வதேச மற்றும் தேசிய பிரச்னைகள் குறித்து பிரதமர் விளக்கியதாக குடியரசுத்தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.