சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு

சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு

இளவரசி

8 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 • Share this:
  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருடன் சிறையில் இருந்த இளவரசி உள்ளிட்ட 8 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

  அதன்படி, இளவரசி, மற்றும் இரண்டு பெண் கைதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 8 பேருக்கு இந்த பரிசோதனை நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.

  மேலும் படிக்க... சசிகலா எத்தனை நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்? - மருத்துவ கண்காணிப்பாளர் விளக்கம்

  சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுடன் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியேர் தண்டனை பெற்று அடைக்கப்பட்டவர்கள் என்பது குற்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: