இந்திய- சீன எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை: இந்திய ராணுவம் விளக்கம்

கோப்புப்படம்

கிழக்கு லடாக் எல்லையில் சீனாவே துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் விளக்கமளித்துள்ளது.

 • Share this:
  இந்தியாவுக்கும் - சீனாவுக்கும் இடையிலான லடாக் எல்லையில், கடந்த மே மாதம் முதல் மோதல் நீடித்து வருகிறது. இந்தநிலையில் கிழக்கு லடாக் எல்லையான பாங்கோங் சோ ஏரி பகுதியில், இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பதாக சீன ராணுவம் குற்றம்சாட்டியது.

  ஆனால், இதனை மறுத்துள்ள இந்திய ராணுவம், சீன படையினரே இந்திய முகாமுக்கு அருகில் வந்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் மற்றும் ராஜீய ரீதியாலான பேச்சுவார்த்தைகளை மீறும் வகையில் சீன ராணுவத்தினர் செயல்பட்டு வருவதாகவும் இந்திய ராணுவம் குற்றம்சாட்டியுள்ளனர்.  மேலும் படிக்க...எல்லையில் பதற்றம்: இந்தியா துப்பாக்கிச்சூடு நடத்தியதாக  சீனா புகார்

  மேலும் சீனப் படைகள் ஆத்திரமூட்டும் வகையில் செயல்பட்ட போதும் நமது ராணுவத்தினர் பொறுப்புடன் செயல்பட்டு அமைதியை நிலைநாட்ட முயற்சிப்பதாகவும், நாட்டின் இறையாண்மையை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம் என்றும் இந்திய ராணுவம் கூறியுள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: