முகப்பு /செய்தி /இந்தியா - சீனா / இந்தியா-சீனா கமாண்டர்கள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை: படைகளை முழுமையாக திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தும் என தகவல்..

இந்தியா-சீனா கமாண்டர்கள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை: படைகளை முழுமையாக திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தும் என தகவல்..

இந்தியா-சீனா கமாண்டர்கள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை: படைகளை முழுமையாக திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தும் என தகவல்..

எல்லையில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இன்று மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துகின்றனா். அப்போது, எல்லையில் படைகளை சீனா முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்த இந்தியத் தரப்பு முடிவு செய்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

எல்லை பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பாக இந்திய- சீன ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 7-வது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. லடாக் எல்லையில் சீனப் படைகள் அத்துமீறி நுழைய முயன்றதால், எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இருதரப்பும் படைகளைக் குவித்துள்ள நிலையில், பதற்றத்தைத் தணிக்கும் வகையில், இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

மேலும் படிக்க...கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை.. விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைப்பு..

இதன் 7-வது சுற்றுப் பேச்சுவார்த்தை, லடாக்கின் சுசுல் பகுதியில் இன்று நண்பகல் 12 மணிக்கு தொடங்குகிறது. இந்திய தரப்பில் கமாண்டர் ஹரிந்தர் சிங் தலைமையிலான குழு பங்கேற்கிறது. அப்போது, அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஒரே நேரத்தில் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்றும், விரைவில் முடிக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: China vs India, Ladakh