டிரம்ப் & ஜி ஜின்பிங் - இருவரில் இந்தியர்களின் தேர்வு யார்...?

India vs China | "இந்தியா - சீனா உறவு குறித்த 21 கேள்விகள் அடங்கிய வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளது”

டிரம்ப் & ஜி ஜின்பிங் - இருவரில் இந்தியர்களின் தேர்வு யார்...?
ட்ரம்ப், ஜீ ஜின்பிங்
  • News18
  • Last Updated: June 5, 2020, 10:56 PM IST
  • Share this:
இந்திய எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் சீனா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கும் சவாலாக இருந்து வருகிறது.  கொரோனா வைரஸ் சீனா தான் உருவாக்கி பரப்பியுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால் சீனா குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது குறித்து நியூஸ் 18 செய்தி குழுமம் நாடு முழுவதும் 13 மொழிகளில் ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பு நடத்தியது,

அதில் சீனாவை எப்படி பார்க்கிறீர்கள்? எல்லைப் பகுதியில் இந்திய-சீனப் படைகள் கைகலப்பு வரை சென்றது உங்களுக்கு தெரியுமா? பாகிஸ்தானுக்கு சீனா உறுதியான ஆதரவு அளிப்பது உங்களுக்கு தெரியுமா?  சீன முதலீடுகளை வரவேற்கிறீர்களா? என 21 கேள்விகள் கேட்கப்பட்டன.

நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பேர் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த நிலையில், இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளது.


News18


அதன்படி, சீனாவுக்கு சர்வதேச அளவில் நெருக்கடி வந்தால் இந்தியா எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு, 74 % பேர் இந்தியா எதிராக இருக்க வேண்டும் என்று பதில் அளித்துள்ளனர். எனினும், மொழிவாரியாக பார்க்கும் போது 51 & தமிழர்கள் மற்றும் 52 சதவிகித பஞ்சாபியர்கள், இந்தியா நடுநிலை வகிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

News18
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் சீனா நம்பகத்தன்மை இன்றி நடந்துகொண்டதாக 94 % இந்தியர்கள் கூறியுள்ளனர். மேலும், 88 % இந்தியர்கள், சீனாவின் 5 ஜி கட்டமைப்பு முதலீடு இந்தியாவில் வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.

News18


91 % இந்தியர்கள் சீன பொருட்களை புறக்கணிக்க ஆதரவு அளிக்கின்றனர். இந்த 91-ல் மராத்தியர்கள் 97 % பேர் இருக்கின்றனர். மேலும், 76 % பஞ்சாபியர்கள் அதற்கு அடுத்ததாக இருக்கின்றனர்.

மொத்தத்தில் வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 84 % பேர், சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இல்லை. 87% பேர் இந்தியாவில் சீன முதலீடு வேண்டம் என்கிறார்கள்.

News18


72 % பேர் சீன பொருட்களை வாங்கப்போவதில்லை என்றும், 23 % பேர் சீனப் பொருட்கள் வாங்குவதை குறைக்கப்போவதாகவும், 4 % பேர் சீனப் பொருட்களை தொடர்ந்து வாங்க இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

 

இந்தியாவின் அனைத்து மொழியினரும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா இருப்பதாக ஒன்றுபட்டு கருத்து கூறியுள்ளனர். 70 % பேர் இந்தியா - சீனா இடையே ராணுவ மோதல் வரும் என்று கூறியுள்ளனர். ஆனால், மொழிவாரியாக பார்க்கும் போது 56 % மலையாளிகள் அப்படி நினைக்கவில்லை. 

News 18


61 % இந்தியர்கள் சீனாவின் நடவடிக்கைகள் எதிரி நாட்டைப் போல இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால், குஜராத்திகள், தமிழர்கள் மற்றும் மராத்தியர்கள் சீனா வெற்று தோரணை காட்டுவதாக கூறியுள்ளனர்.

அதேபோல, இவர்களில் உங்கள் தேர்வு? என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்பை 92 % பேரும், சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ 8 % பேரும் தேர்வு செய்துள்ளனர்.









First published: June 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading