இந்தியா & சீனா உறவு - 21 கேள்விகள் அடங்கிய வாக்கெடுப்பு முடிவுகள் இதோ...
India vs China | "இந்தியா - சீனா உறவு குறித்த 21 கேள்விகள் அடங்கிய வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளது”

News18
- News18
- Last Updated: June 5, 2020, 10:56 PM IST
இந்திய எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் சீனா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கும் சவாலாக இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் சீனா தான் உருவாக்கி பரப்பியுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால் சீனா குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது குறித்து நியூஸ் 18 செய்தி குழுமம் நாடு முழுவதும் 13 மொழிகளில் ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பு நடத்தியது,
அதில் சீனாவை எப்படி பார்க்கிறீர்கள்? எல்லைப் பகுதியில் இந்திய-சீனப் படைகள் கைகலப்பு வரை சென்றது உங்களுக்கு தெரியுமா? பாகிஸ்தானுக்கு சீனா உறுதியான ஆதரவு அளிப்பது உங்களுக்கு தெரியுமா? சீன முதலீடுகளை வரவேற்கிறீர்களா? என 21 கேள்விகள் கேட்கப்பட்டன.
நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பேர் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த நிலையில், இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளது. 
அதன்படி, சீனாவுக்கு சர்வதேச அளவில் நெருக்கடி வந்தால் இந்தியா எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு, 74 % பேர் இந்தியா எதிராக இருக்க வேண்டும் என்று பதில் அளித்துள்ளனர். எனினும், மொழிவாரியாக பார்க்கும் போது 51 & தமிழர்கள் மற்றும் 52 சதவிகித பஞ்சாபியர்கள், இந்தியா நடுநிலை வகிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் சீனா நம்பகத்தன்மை இன்றி நடந்துகொண்டதாக 94 % இந்தியர்கள் கூறியுள்ளனர். மேலும், 88 % இந்தியர்கள், சீனாவின் 5 ஜி கட்டமைப்பு முதலீடு இந்தியாவில் வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.

91 % இந்தியர்கள் சீன பொருட்களை புறக்கணிக்க ஆதரவு அளிக்கின்றனர். இந்த 91-ல் மராத்தியர்கள் 97 % பேர் இருக்கின்றனர். மேலும், 76 % பஞ்சாபியர்கள் அதற்கு அடுத்ததாக இருக்கின்றனர்.
மொத்தத்தில் வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 84 % பேர், சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இல்லை.