லடாக் எல்லையில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறுவதும், அவர்களுக்கு இந்திய வீரர்கள் உரிய பதிலடி கொடுப்பதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால், லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்துக் கொண்டே இருக்கிறது. இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, 5 அம்ச ஒப்பந்தங்கள் போட்ட பின்னரும், இந்த பதற்றம் ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில், லடாக் பகுதியில் தற்போது கடுமையான குளிர் நிலவி வருகிறது. வரும் மாதங்களில் இது அதிகமாகும் என்பதால், வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு சென்றுவிடுவது வழக்கம். பொதுவாக குளிர் அதிகமாக இருக்கும்போது இரு நாட்டு ராணுவ வீரர்களும் பாதுகாப்பாக தங்களது இடத்திற்கு பின் வாங்கி விடுவார்கள். குளிர் காலம் முடிந்த பின்னர் மீண்டும் எல்லையில் பாதுகாப்பு பணியை தொடருவார்கள், ஆனால், தற்போது பதற்றமான சூழ்நிலை உள்ளதால் இந்திய ராணுவ வீரர்கள் பின் வாங்குவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், குளிரை சமாளிக்கும் வகையில் அவர்கள் தயார் செய்யப்பட்டுள்ளனர். குளிரை தாங்கிக் கொள்ளும் அளவிற்கு வெப்பத்தை ஏற்படுத்துவதற்கான பொருட்கள், கம்பளி ஆடைகள், எரிபொருள், உணவு பொருட்கள், கொட்டகைகள் அமைப்பதற்கு தேவையான உபகரணங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் படிக்க...ராம்நாத் கோவிந்த், மோடி, சோனியா காந்தி உள்ளிட்ட இந்தியர்களை உளவு பார்க்கும் சீனா - அதிர்ச்சித் தகவல்
அவைகளை ராணுவ வீரர்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் விமானப்படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, லடாக் ராணுவ வீரர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பல பொருட்கள், அப்படியே இருப்பதாகவும், புதிய பொருட்கள் சென்று சேரும் வரை, பழைய பொருட்களை அவர்கள் பயன்படுத்தி வருவார்கள் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian army, Ladakh