இந்தியாவின் பொறுமைக்கும் எல்லை உண்டு: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை

எல்லைப்பகுதியில் அத்துமீறும் விவகாரத்தில் இந்தியாவின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.

இந்தியாவின் பொறுமைக்கும் எல்லை உண்டு: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • Share this:
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். மேற்கு வங்க மாநிலத்தை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் ஆய்வு செய்து வரும் அவர், டார்ஜிலிங்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அண்டை நாடுகளுடன் இந்தியா எப்போதும் நல்லுறவையே விரும்புவதாகவும், அதேசமயம் நமது எல்லைகளையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக நமது ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தாய்நாட்டை பாதுகாக்க கால்வான் பள்ளத்தாக்கில் 20 வீரர்கள் தங்களது இன்னுயிரை இழந்துள்ளதாகக் கூறிய அவர், இந்தியாவின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க...மான் கிபாத்தின் 70-வது நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்


அங்குள்ள ராணுவ தளபதிகள் மற்றும் அதிகாரிகளுடன் உரையாடிய பின்னர் ராணுவ தளவாடங்களை பார்வையிட்டார்.
First published: October 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading