சீனப் பொருட்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு விதித்துள்ள சில கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக இறக்குமதி விகிதம் குறைதுள்ளது. அண்டை நாடான சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 2021-ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தை ஒப்பிடும் போது, கடந்த நவம்பர் 2022-ல் சுமார் 5.42% குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய வர்த்தக துறையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கடந்த நவம்பர் 2022-ல் சீனாவிலிருந்து இந்தியா சுமார் 7.65 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்துள்ளதால் இறக்குமதி மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது.
முக்கியமாக சீனாவிலிருந்து நம் நாட்டிற்கு எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அதிகம் இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது எலெக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்யும் அளவு கணிசமாக குறைந்துள்ளது. இது தவிர சரிவை கண்ட முக்கிய இறக்குமதி பொருட்களில் பர்சனல் கம்ப்யூட்டர்ஸ் (லேப்டாப்கள், Palmtop போன்றவை), யூரியா மற்றும் டைஅமோனியம் பாஸ்பேட் உள்ளிட்ட சில பொருட்கள் அடங்கும். கடந்த ஜூலை 2022-ல் சீனாவில் இருந்து இந்தியாவின் மாதாந்திர இறக்குமதி 10 பில்லியன் டாலரை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த சரிவு முதல் முறையா?
சீனாவில் இருந்து வரும் இறக்குமதி குறைந்துள்ளது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபரில் சீனாவில் இருந்து வரும் இறக்குமதி பொருட்களின் மதிப்பு 8.70 பில்லியன் டாலரிலிருந்து, 7.85 பில்லியன் டாலராக குறைந்தது. எனவே 2022-23 நிதியாண்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக நவம்பர் 2022-ல் சீன இறக்குமதி குறைந்திருப்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
கடந்த 2 மாதங்களில் சீனாவில் இருந்து இறக்குமதி குறைந்துள்ளது, இந்த காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த இறக்குமதியில் ஏற்பட்ட அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், நவம்பர் 2022 இல், இந்தியாவின் மொத்த இறக்குமதி 9.80 சதவீதம் அதிகரித்து 58.23 பில்லியன் டாலராக இருந்தது.
ஏற்றுமதியும் சரிவு:
சீன பொருட்களின் இறக்குமதி மட்டுமல்ல அந்த நாட்டிற்கான ஏற்றுமதியும் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கிடையே சீனாவின் 2022-ஆம் ஆண்டு அக்டோபர் ஏற்றுமதிகள் பலவீனமான உலகளாவிய தேவையால் 0.3% சரிந்ததாக AP செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அங்கே படுவேகமாக மீண்டும் பரவி வரும் பெருந்தொற்று காரணமாக போடப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகள் காரணமாக நுகர்வோர் செலவினங்களில் ஏற்பட்ட பாதிப்பதால் இறக்குமதி 0.7% குறைந்துள்ளது என்றும் செய்தி வெளியாகி இருக்கிறது.
நவம்பர் 2022 இல், இந்தியாவின் மொத்த இறக்குமதி 9.80 சதவீதம் அதிகரித்து 58.23 பில்லியன் டாலராக இருந்தது, சீனாவின் உலகளாவிய வர்த்தக உபரி 2021 அக்டோபரில் 26.9% அதிகரித்து 84.7 பில்லியன் டாலராக இருந்தது. அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் செப்டம்பர் மாதத்தில் இருந்து 11.6% குறைந்து 50.8 பில்லியன் டாலராக இருந்தது, அதே நேரத்தில் அமெரிக்க பொருட்களின் இறக்குமதி 4.6% குறைந்து 14.7 பில்லியன் டாலராக உள்ளது.
அதே போல ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சீனாவின் ஏற்றுமதிகள் 23.9% சரிந்து 47 பில்லியன் டாலராகவும், ஐரோப்பிய பொருட்களின் இறக்குமதி 40.9% குறைந்து 23.8 பில்லியன் டாலராகவும் இருப்பதாக AP செய்தி நிறுவனம் கூறி இருக்கிறது. உலக வங்கி மற்றும் பிரைவேட் செக்டர் ஃபோர்கேஸ்டர்ஸ் கடந்த ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் மதிப்பீடுகளை 2.2% ஆக குறைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, China, Import tax, India, Trade