• HOME
  • »
  • NEWS
  • »
  • india-china
  • »
  • கல்வான் பகுதியில் இருந்து இந்திய படைகளை வாபஸ் பெற வேண்டும் - வலியுறுத்துகிறது சீனா

கல்வான் பகுதியில் இருந்து இந்திய படைகளை வாபஸ் பெற வேண்டும் - வலியுறுத்துகிறது சீனா

கோப்பு படம்

கோப்பு படம்

இந்திய தரப்பில் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான வெளியுறவுத்துறை அமைச்சக இணை செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவா, சீன தரப்பில் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சக இயக்குநர் ஹாங் லியாங் ஆகியோர் வீடியோ கான்பரஸ் மூலம் ஆலோசனை மேற்கொண்டனர்.

  • Share this:
    கிழக்கு லடாக்கில் அமைதியை நிலைநாட்டும் வகையில் இந்தியா, சீனா உயர் அதிகாரிகள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய தரப்பில் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான வெளியுறவுத்துறை அமைச்சக இணை செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவா, சீன தரப்பில் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சக இயக்குநர் ஹாங் லியாங் ஆகியோர் வீடியோ கான்பரஸ் மூலம் ஆலோசனை மேற்கொண்டனர்.

    இதுதொடர்பாக சீன வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருநாட்டு ராணுவம் மற்றும் உயர் அதிகாரிகள் இடையே தொலைதொடர்பை வலுப்படுத்தி பேச்சுவார்த்தை மூலம் எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற இருகட்ட பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவை இரு நாட்டு படைகளுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6 மற்றும் 22ம் தேதி நடைபெற்ற ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையின் போது கல்வான் எல்லையில் இந்திய கட்டமைப்பை அகற்ற வேண்டும் என்றும் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் சீன தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: