• HOME
  • »
  • NEWS
  • »
  • india-china
  • »
  • கால்வான் பள்ளத்தாக்கு எங்களுக்கே சொந்தம்: உரிமை கோரிய சீனா- நிராகரித்த இந்தியா

கால்வான் பள்ளத்தாக்கு எங்களுக்கே சொந்தம்: உரிமை கோரிய சீனா- நிராகரித்த இந்தியா

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கால்வான் பள்ளத்தாக்கின் மீது சீனா உரிமை கோரியதை இந்தியா நிராகரித்துள்ளது.

  • Share this:
    இந்தியா - சீனா எல்லைப் பகுதியான கல்வான் பள்ளாத்தாக்கு பகுதியில் ஜூன் 15-ம் தேதி இருநாட்டு ராணுவ வீரர்களும் மோதலில் ஈடுபட்டனர். அந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதனையடுத்து, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இரு நாட்டு ராணுவங்களும் பின்வாங்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றை டெல்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டது.

    அதில் கால்வாய் பள்ளத்தாக்கு முழுவதுமே சீனாவின் பகுதி என்றும் அந்த பகுதியில் சீனா பல ஆண்டுகளாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா அத்துமீறி நுழைந்தது என்றும் அதனால் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியை சீனா உரிமை கோருவதை இந்தியா நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்டவா, ‘கால்வான் பள்ளத்தாக்கு பகுதி குறித்த நிலைப்பாடு வரலாற்றுரீதியாக தெளிவாக உள்ளது.

    அசல் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு(Line of Actual Control)விவகாரத்தில் மிகவும் மிகைப்படுத்தப்பட்ட ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்களை சீனா முன்வைக்கிறது. முந்தைய காலத்தில் சீனா ஒப்புக்கொண்ட நிலைப்பாட்டில் கூட இந்த வாதம் கிடையாது’ என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: