எல்லையில் பதற்றம்: இந்தியா துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா புகார்
எல்லையில் பதற்றம்: இந்தியா துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா புகார்
கோப்புப் படம்
40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய- சீனா எல்லையான லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியாவுக்கும் - சீனாவுக்கும் இடையிலான லடாக் எல்லையில், கடந்த மே மாதம் தொடங்கி மோதல் நீடித்து வருகிறது. இதில் கல்வான் பள்ளத்தாக்கில் ஜுன் மாதம் 15ஆம் தேதி நிகழ்ந்த மோதலில், இந்திய வீரர்கள் இருபது பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தநிலையில் கிழக்கு லடாக் எல்லையான பாங்கோங் த்சோ ஏரி பகுதியில், இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பதாக சீன ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.
இதனால் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. படைகளை விலக்கிக் கொள்ள இருதரப்பினரும் முன்வந்தபோது, இந்திய ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், இதுபோன்ற ஆபத்தான நகர்வுகளில் இந்தியா ஈடுபடக் கூடாது எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக 1975ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தின் துலூங் லா பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு அருகே, துப்பாக்கிசூடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.