முகப்பு /செய்தி /இந்தியா - சீனா / சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவத்துடன் கைகலப்பு: 20 சீன ராணுவ வீரர்கள் படுகாயம்

சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவத்துடன் கைகலப்பு: 20 சீன ராணுவ வீரர்கள் படுகாயம்

மாதிரி படம்

மாதிரி படம்

"எல்லை மோதல் தொடர்பாக எனக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லிஜியன் தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

சிக்கிம் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் 20 சீன வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்திய தரப்பில் 4 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரை ஒட்டிய லடாக் எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்தனர். கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்புக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள், வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அமெரிக்க உளவுத் துறை உறுதி செய்தது.

லடாக்கின் காரகோரத்தில் இருந்து வடகிழக்கின் அருணாச்சல பிரதேசத்தின் ஜாசப்லா வரை 3,488 கி.மீ. தொலைவுக்கு இந்திய - சீனா எல்லைப் பகுதி நீள்கிறது. லடாக் மற்றும் வடகிழக்கில் இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை எப்பொதுமே இருந்து வருகிறது.

கடந்த 20-ம் தேதி சிக்கிமின் கிழக்குப் பகுதியான நதுலா எல்லையில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் 20 சீன வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்திய ராணுவ தரப்பில் 4 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்திய - சீன ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

"எல்லை மோதல் தொடர்பாக எனக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லிஜியன் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: India vs China