Home /News /india-china /

கல்வான் பள்ளதாக்கில் இந்திய - சீனா மோதல்: 1962 ஆம் ஆண்டு என்னதான் நடந்தது?

கல்வான் பள்ளதாக்கில் இந்திய - சீனா மோதல்: 1962 ஆம் ஆண்டு என்னதான் நடந்தது?

இந்தியா - சீனா

இந்தியா - சீனா

பனிபடர்ந்த இமயமலைத் தொடரை உச்சகட்ட கொதிநிலைக்கு கொண்டு போயிருக்கிறது கல்வான் பள்ளதாக்கில் இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே நிகழ்ந்த மோதல். இந்த மோதல் குறித்த செய்திகள் அனைத்திலும் 1962-ஆம் ஆண்டு நினைவு கூறப்படுகிறது. அப்படி என்னதான் 1962 ஆம் ஆண்டு என்னதான் நடந்தது??

மேலும் படிக்கவும் ...
    இந்திய குடியரசும், புரட்சிக்கு பிறகான சீன குடியரசின் உருவாக்கமும் கிட்டத்தட்ட சமகாலத்தில், அதாவது 1949 ஆம் ஆண்டுவாக்கில் நிகழ்ந்தது. அப்போது சீனாவுடன் நல்லுறவைப் பேணுவது என்பது இந்தியாவின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் திபெத் பகுதியை கைப்பற்றி விட்டதாக சீனா அறிவித்த போது, இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்தது.

    எனினும் சீனாவுடனான நல்லுறவை இந்தியா தொடர்ந்தது. இந்த பின்னணியில் 1954 ஆம் ஆண்டு இருநாடுகளிடையே பஞ்சசீல கொள்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது தான் இந்தோ சீனா பாய் என்ற நட்புறவு முழக்கம் பிரபலமானது.

    இதனிடையே, இருநாட்டு எல்லையை உறுதிப்படுத்தும் வகையில், மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என அப்போதைய பிரதமர் நேரு வலியுறுத்தினார். அப்போது இந்தியாவின் ஒரு லட்சத்து 20,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை, தனது வரைபடத்தில் சீனாவுக்கு சொந்தமானது என அந்நாடு குறிப்பிட்டிருந்தது.

    இந்நிலையில் 1959 ஆம் ஆண்டு இந்தியா வந்த தலாய்லாமாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் மூலம், தான் அவமதிக்கப்பட்டதாக சீனத்தின் தலைவர் மா சேதுங் கருதினார். திபெத்தில் தனது ஆதிக்கத்துக்கு இந்தியா அச்சுறுத்தலாக அமையக்கூடும் என சீனா கருதியது.

    இதைத்தொடர்ந்து 1962ஆம் ஆண்டு கோடைகாலத்தில், எல்லையில் இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் அதிகரிக்க தொடங்கியது.இதன் உச்சமாக 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி லடாக் உள்ளிட்ட இந்திய எல்லைப்பகுதிக்குள் சீனா அத்துமீறி நுழைந்தது.

    அத்துமீறிய முதல்நாளிலேயே சீனா தாக்குதலை தொடங்கியதால், இந்திய படைகள் இழப்பை சந்தித்தன. அக்டோபர் 22 ஆம் தேதி இந்திய நிலைகளை குறிவைத்து சீனா தாக்குதல்களை நடத்தியது.

    இந்திய தரப்பில் 1383 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தியா எதிர்த்தாக்குதலை தொடங்கிய போது, இருதரப்பிலும் கடுமையான இழப்புகள் ஏற்பட்டன. 722 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.



    இறுதியில் போரில் தாங்கள் வென்றதாக சீனா தெரிவித்தது.  இதற்கு பிறகு 1967- ஆம் ஆண்டு நாதுலாவிவ் ஏற்பட்ட மோதலில் 80 இந்திய வீரர்களும் 400 சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். 1975- ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தின் துலாங் லா- வில், அசாம் ரைபிள் வீரர்கள் சென்ற வாகனத்தை, சீன ராணுவத்தினர் தாக்கியதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

    அதற்கு பிறகு தற்போது லடாக் எல்லையில் இரு நாட்டு வீரர்களும் கடுமையதாக மோதிக் கொண்டுள்ளனர்.

    மேலும் படிக்க...

    கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.12,000 கோடி தேவை: பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: China, India

    அடுத்த செய்தி