• HOME
  • »
  • NEWS
  • »
  • india-china
  • »
  • லடாக் எல்லையில் பதற்றம்: இந்திய - சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

லடாக் எல்லையில் பதற்றம்: இந்திய - சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

கோப்புப்படம்

கோப்புப்படம்

லடாக் எல்லையில் அமைதியை நிலைநாட்ட இந்திய - சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில், அங்கம் வகிக்கும் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். இதன் ஒருபகுதியாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர், சீன அமைச்சர் வாங்-யி-ஐ சந்தித்தார்.

    சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், இரு நாட்டு எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து இருவரும் விவாதித்தனர். அப்போது இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கும் ஐந்து அம்ச கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.



    இதில் பிரச்னைக்குரிய லடாக் எல்லையில் அமைதியை நிலைநாட்ட இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், பதற்றத்தை அதிகரிக்கக்கூடிய எந்தவொரு செயலையும் தவிர்க்கவும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

    மேலும் படிக்க...பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திலும் முறைகேடு - புதுக்கோட்டை மக்கள் வேதனை

    இந்திய - சீனா எல்லை விவகாரங்கள் குறித்து அனைத்து நெறிமுறைகள் மற்றும் ஒப்பந்தங்களை நிலைத்திருக்க செய்யவும் அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: