’சீனாவுக்கு என்ன தைரியம்?; பிரதமரே அமைதி ஏன்...?..’ ராகுல் காந்தி கேள்வி

லடாக் மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்

’சீனாவுக்கு என்ன தைரியம்?; பிரதமரே அமைதி ஏன்...?..’ ராகுல் காந்தி கேள்வி
ராகுல் காந்தி, எம்.பி.
  • News18
  • Last Updated: June 17, 2020, 9:59 AM IST
  • Share this:
இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கில் மே மாதம் முதல் வாரத்தில் இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து லடாக் எல்லையில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இருநாடுகளும் வீரர்களையும், படைகளையும் குவித்து வந்தன.

இந்நிலையில் ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர் பேச்சுவார்த்தைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன.

இதையடுத்து கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து இருநாடுகளும் படைகளை விலக்கிக் கொள்ளத் தொடங்கின. படைகள் பின்வாங்கிய போது, சீன ராணுவத்தினர் இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.


இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. 4 பேர் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பதிவிட்டுள்ள ட்வீட்டில், "பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்..? ஏன் ஒளிந்து கொண்டு இருக்கிறார்?” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “என்ன நடந்தது என்று நமக்கு தெரிய வேண்டும். சீனா நமது வீரர்களை எப்படி கொல்லலாம்...? எப்படி அவர்கள் நமது நிலத்தை எடுக்கலாம்?” என்றும் அவர் கூறியுள்ளார்.Also See:

இந்தியாவில் ₹ 10 விலையில் கொரோனா உயிர் காக்கும் மருந்து


இந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு
First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading