மத்திய அரசு தடை எதிரொலியாக செல்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர்இட், வீ சேட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இதையடுத்து, ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்களில் இருந்து 59 செயலிகள் நீக்கப்பட்டன. இந்நிலையில், செல்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்த டிக் டிக் செயலியும் முடக்கப்பட்டுள்ளதால் பயனாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதற்கிடையே, தடை செய்யப்பட்ட செயலிகளின் நிறுவனங்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்கலாம் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.