covid deaths in India | China| இந்தியாவின் நிலையை கேலி செய்த சீனா; தன் நாட்டுப் பெருமையைப் பேச இந்தியாவில் எரியும் உடல்களைக் காட்சிப்படுத்தி கேலி செய்த சீனா - சீன நெட்டிசன்களின் கடும் விமர்சனம்

covid deaths in India | China| இந்தியாவின் நிலையை கேலி செய்த சீனா; தன் நாட்டுப் பெருமையைப் பேச இந்தியாவில் எரியும் உடல்களைக் காட்சிப்படுத்தி கேலி செய்த சீனா - சீன நெட்டிசன்களின் கடும் விமர்சனம்

எரியும் உடல்கள். கொரோனா மரணங்கள்.

சீனாவின் முதன்மை சட்ட அமலாக்க அமைப்பு ஒன்று இந்தியாவில் ஏற்பட்டு வரும் கொடிய கொரோனா மரணங்களை சுட்டிக்காட்டி, எரியும் உடல்களை காட்டி,  மாறாக சீனா அப்படியல்ல என்பதாக தற்பெருமை பேசி வெளியிட்ட பதிவு ஒன்றை சீன சமூக ஊடகவாசிகள் கடுமையாக விமர்சிக்க தற்போது அந்தப் பதிவை நீக்கியுள்ளது.

  • Share this:

    சீனாவின் முதல் நிரந்தர விண்வெளி நிலையத்தின் முதல் மாட்யூலை அறிமுகம் செய்து விண்ணில் செலுத்தியது, அந்த விண்வெளி நிலைய முதல் மாட்யூல் வானில் பறக்கும் போது ஏற்படும் ராக்கெட் நெருப்பையும் இந்தியாவில் கொரோனா மரணங்களினால் ஆங்காங்கே எரியும் உடல்களையும் காட்டி நாங்கள் எப்படி இந்தியா எப்படி என்ற ரீதியில் இந்திய மரணங்களை தங்களது தற்பெருமைக்கான, விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியை பெருமை பீற்றிக் கொள்ளும் தருணமாக மாற்றியுள்ள அசிங்கமான ஒரு செய்கையை அந்நாட்டு சமூக ஊடக வாசிகளே போட்டு கிழித்தெடுக்க பிறகு அந்தப் பதிவை நீக்கியுள்ளனர்.

    அதாவது எங்கள் நெருப்பு எப்படி இந்தியாவில் எரியும் நெருப்பு எப்படி என்று நம் நாட்டின் துயரை வைத்து தன் நாட்டின் பெருமையை பீற்றிக்கொள்ளும் புதிய தாழ்வு நிலைக்கு சென்று விட்டது சீனா என்ற விமர்சனங்கள் எழுந்தன.

    தியான்ஹே விண்வெளி நிலைய ராக்கெட் பாய்ச்சலையும் இந்தியாவில் கொரொனாவினால் மரணமடைந்தவர்களை கொத்துக் கொத்தாக எரிப்பதையும் காட்டி “"China lighting a fire versus India lighting a fire." என்று தலைப்பிட்டு கேலி செய்துள்ளது

    இந்தப் பதிவை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மற்றும் சட்ட விவகார ஆணையம் தனது அதிகாரபூர்வ சைனோ வெய்போவில் ஹாஷ்டேக் உருவாக்கி இந்தியாவில் 4 லட்சம் கோவிட் கேஸ்கள் ஒருநாளில் என்பதையும் குறித்துள்ளது.

    மக்கள் கொத்துக் கொத்தாக இறக்கின்றனர், இந்த சமயத்தில் இது என்ன அசிங்கமான ஒரு தற்பெருமைப் பதிவு, உணர்வே இல்லையா என்று சீன நெட்டிசன்கள் பிடித்து வாங்கு வாங்கென்று வாங்க சனிக்கிழமை போட்ட பதிவு மறுநாள் காணோம்.

    ஒரு புறம் இப்படிச் செய்து விட்டு மறுபுறம், “இந்தியாவுக்கு உதவிகள் வரும் வாரங்களில் தொடரும் சீனா செயல் மூலம் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கிறது” என்றும் கூறிக்கொள்கிறது.

    இது தொடர்பாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் ஆசிரியர் அந்தப் பதிவின் கீழ், “மனிதார்த்தம், மனிதநேயம் என்ற பேனரை உயரமாகத் தூக்கிப் பிடியுங்கள், இந்தியாவுக்குக் கருணை காட்டுங்கள், சீன சமூகத்தை அறவியல் ரீதியான ஒரு இடத்திற்கு உயர்த்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
    Published by:Muthukumar
    First published: