கல்வான் பள்ளத்தாக்கு உள்பட 3 இடங்களில் பின்வாங்கிய இந்திய, சீன ராணுவம்

கல்வான் பள்ளத்தாக்கு உள்பட 3 இடங்களில் பின்வாங்கிய இந்திய, சீன ராணுவம்
மாதிரிப் படம்
  • Share this:
இந்திய மற்றும் சீனப் படைகள் எல்லைப் பகுதிகளில் மூன்று இடங்களில் சில கி.மீ தூரத்துக்கு பின் சென்றுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா- சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இரண்டு நாட்டு வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதனால், இருநாடுகளிடையே பதற்றநிலை உருவானது. பதற்றத்தைத் தணிக்க ராணுவ உயரதிகாரிகள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

மூன்று கட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒத்துழைப்பின் அடிபடையில், கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட மூன்று எல்லைப் பகுதிகளில் இருநாட்டு ராணுவங்களும் சில கி.மீ தூரத்துக்கு பின் சென்றுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. buffer zone என்று அழைக்கப்படும் இரண்டு நாடுகளுக்கும் பொதுவான பகுதியாக ஒரு இடம் உருவாக்கப்பட்டுள்ளது.


இரு நாடுகளும் பின்வாங்குவதற்கான முடிவுக்கு சீன ஒப்புக்கொண்டநிலையில் இந்தநிகழ்வு நடைபெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் இரண்டு தரப்பு ராணுவங்களும் உருவாக்கிய தற்காலிக தங்குமிடங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களும் அகற்றப்பட்டுள்ளன.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading