லடாக் எல்லையில் மீண்டும் சீனா ஊடுருவல் முயற்சி - முறியடித்த இந்தியா

லடாக் பிராந்தியத்தில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியின் வடக்கு கரையோர பகுதியில் சீனாவின் ஊடுருவல் முயற்சியை இந்தியா முறியடித்துள்ளது

லடாக் எல்லையில் மீண்டும் சீனா ஊடுருவல் முயற்சி - முறியடித்த இந்தியா
கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் இந்திய படைகள் (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: August 31, 2020, 1:02 PM IST
  • Share this:
லடாக்கின் கிழக்குப் பகுதியில் இந்திய-சீன எல்லையில் அமைந்துள்ள கல்வாண் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி இரவில் இந்திய - சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். பதில் தாக்குதலில் சீன வீரர்கள் 40 க்கும் மேற்பட்டோர் இறந்ததாக தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்து அந்நாட்டு ராணுவம் அதிகாரப்பூர்வ தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.

இதனை அடுத்து, இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, எல்லையில் பதற்றத்தை குறைத்தனர். பின்னர், படிப்படியாக எல்லையில் குவிக்கப்பட்ட வீரர்கள் தங்களது நிலைக்கு திரும்பினர்.

இந்த நிலையில், மீண்டும் சீனா எல்லை தாண்டி பிரச்னை செய்துள்ளது. ஆகஸ்டு 29 மற்றும் 30 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், ஏற்கனவே இருக்கும் நிலையை மாற்றும் முயற்சிகளில் சீன ராணுவம் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


பாங்கோங் த்சோ ஏரியின் வடக்கு கரையோரத்தில் நடந்த சீன ராணுவத்தின் இந்த முயற்சியை இந்தியப்படையினர் முறியடித்ததாகவும், சீன ராணுவம் தன்னிச்சையாக அங்கிருக்கும் சூழலை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டால் அதை தடுக்கும் விதத்தில் தங்களது நிலையை வலிமைப்படுத்தி கொண்டதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

புதிதாக ஏற்பட்ட மோதல் தொடர்பாக சுஷூல் என்ற பகுதியில் ராணுவ கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியாவில் 59 சீன செயலிகள் உள்ளிட்ட சீன பொருட்களுக்கு இந்திய அரசு தடை விதித்ததும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீனா விலகியதும் குறிப்பிடத்தக்கது.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading