முகப்பு /செய்தி /இந்தியா - சீனா / 10,000 வீரர்களை திரும்பப் பெற்றுக் கொண்டது சீனா - உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம்!

10,000 வீரர்களை திரும்பப் பெற்றுக் கொண்டது சீனா - உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம்!

மாதிரி படம்

மாதிரி படம்

முன்களப் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் எப்போதும் போல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இருதரப்பு வீரர்களும் பல்வேறு இடங்களில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

கிழக்கு லடாக்கில், வரையறுக்கப்படாத எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, பள்ளத்தாக்கு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 10,000 பேரை சீனா திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டதை அடுத்து, போர் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து இருநாட்டு படைகளும் லடாக்கை ஒட்டிய பகுதிகளில் குவிக்கப்பட்டன. இதனால் போர்ப்பதற்றம் நிலவி வந்தநிலையில், படை வீரர்களை விலக்கிக் கொள்வது தொடர்பாக இருநாட்டு உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் இடையே பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்த பேச்சுவார்த்தைகளில் படைகளை படிப்படியாக விலக்கிக் கொள்வது குறித்து ஒப்பந்தம் ஏற்பட்டது.

Also read... அமித்ஷா வருகையின் போது விதிகளை மீறி பேனர் - நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி

இந்த நிலையில் கிழக்கு லடாக்கில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த 10,000 ராணுவ வீரர்களை சீனா திரும்ப பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், முன்களப் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் எப்போதும் போல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இருதரப்பு வீரர்களும் பல்வேறு இடங்களில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: China vs India