முகப்பு /செய்தி /இந்தியா - சீனா / 1959-லிருந்தே அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கின் ஒரு பகுதியை சீனா தன் வசம் பிடித்து வைத்துள்ளது- அருணாச்சல பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.

1959-லிருந்தே அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கின் ஒரு பகுதியை சீனா தன் வசம் பிடித்து வைத்துள்ளது- அருணாச்சல பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.

அருணாச்சல பிரதேச காங். எம்.எல்.ஏ.

அருணாச்சல பிரதேச காங். எம்.எல்.ஏ.

இப்போது இருதரப்பினரும் படையை வாபஸ் பெறுவது என்று ஒப்பந்தம் செய்துகொண்டாலும் ஏற்கெனவே முன்பு ஆக்ரமித்த பகுதிகளுக்குத்தான் இந்த படைகள் செல்கின்றன, இதனால் சீனாவுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை என்கிறார் இந்த அருணாச்சல காங்கிரஸ் எம்.எல்.ஏ.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாங்காங் ஏரிப்பகுதியில் இந்திய-சீன படை வாபஸ் ஒப்பந்தம் வரவேற்கப்படுவது ஒரு புறம் இருக்கட்டும், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கின் ஒரு பகுதியை சீனா 1959 முதலெ இன்னமும் தன் வசம் வைத்துள்ளது, கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது என்று அருணாச்சலப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ. நைனாங் எரிங் தெரிவித்துள்ளார்.

அவர் ஏ.என்.ஐ. செய்திக்காக கூறும்போது, “1959-ல் தலாய் லாமா தவாங்கிற்கு வந்த போது சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் அருணாச்சலப் பிரதேசத்துக்குள் நுழைந்தது. நுழைந்து நீண்ட தூரம் இந்தியப் பகுதியை ஆக்ரமித்தது. ஆனால் அங்கு இருக்க முடியாத சூழ்நிலையினால் திரும்பச் சென்றது. ஆனாலும் இப்போதும் அது அவர்கள் வசம்தான் உள்ளது, தவாங்கின் ஒரு பகுதியில் கட்டமைப்புகளை சீனா உருவாக்கியுள்ளது.

அங்கு அவர்கள் ஏற்படுத்திய குடிசைகளில் மக்கள் தங்கியே ஆக வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அவர்கள் இந்திய எல்லையில் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். சாலைகளையும் ரயில்வேக்களையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த வீடுகள் சீனாவின் தந்திர காய்நகர்த்தலாகும். இந்த வீடுகள் தவாங்கின் அந்தப் பகுதியில் இருந்தால் அவர்கள் மேலும் அதற்கு உரிமை கொண்டாடலாம் அல்லவா.

பன்னாட்டு நெருக்கடி அதிகரித்தால் சீனா மேக்மோகன் கோடு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டி வரும். இந்த மேக்மோகன் எல்லை கோட்டை அவர்கள் 1914-ல் ஏற்றுக் கொண்டனர். அந்த வீடுகள் அனைத்தும் மேக்மோகன் லைனில் தான் இருந்தது.

வடகிழக்கு எல்லையிலும் சீனா ஏற்கெனவே வீடுகளைக் கட்டியுள்ளது. இப்போது குடிசைகள் அல்ல, கான்கிரீட்டில் கட்டுகின்றனர்.

பாங்காங் ஏரிப்பகுதியில் சீனா வாபஸ் பெறுகிறது என்பது நாட்டுக்கு நல்ல விஷயம்தான், ஆனால் அவர்கள் வாபஸ் பெறுகிறோம் என்று சொல்கிறார்களே தவிர ஏற்கெனவே ஆக்ரமிப்பு செய்யப்பட்ட பகுதிக்குத்தான் அந்த படைகள் செல்கின்றன. எனவே சீனாவுக்கு எந்த நஷ்டமும் இல்லை” என்றார்.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் எய்தினர்.  இதனியடுத்தே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது.

இப்போது இருதரப்பினரும் படையை வாபஸ் பெறுவது என்று ஒப்பந்தம் செய்துகொண்டாலும் ஏற்கெனவே முன்பு ஆக்ரமித்த பகுதிகளுக்குத்தான் இந்த படைகள் செல்கின்றன, இதனால் சீனாவுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை என்கிறார் இந்த அருணாச்சல காங்கிரஸ் எம்.எல்.ஏ.

First published: