ராணுவ ஜெனரல் தலைமையில் பேச்சுவார்த்தை: சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்கள் துன்புறுத்தப்படாமல் விடுவிப்பு...

கல்வான் பகுதியில் நடைபெற்ற மோதலின்போது சீனப் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய வீரர்கள் 10 பேரை பேச்சுவார்த்தைக்குப் பிறகு அந்நாடு விடுவித்துள்ளது.

ராணுவ ஜெனரல் தலைமையில் பேச்சுவார்த்தை: சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்கள் துன்புறுத்தப்படாமல் விடுவிப்பு...
கோப்புப்படம்
  • Share this:
இந்தியா-சீனா நாட்டு ராணுவ ஜெனரல் மேஜர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் லெப்டினண்ட் கர்னல், மூன்று மேஜர் உட்பட 10 பேர் நேற்று மாலை 5 மணிக்கு விடுவிக்கப்பட்டதாகவும், அவர்களை சீன படையினர் துன்புறுத்தவில்லை என்றும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன ராணுவத்துடனான மோதலில் 76 வீரர்கள் காயமடைந்ததாகவும், அதில் ஒருவர் கூட ஆபத்தான கட்டத்தில் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.


காயமடைந்த வீரர்களில் 58 பேர் ஒருவாரத்திற்குள் பணிக்கு திரும்பிவிடுவார்கள் என்றும் மற்றவர்கள் இரண்டு வாரத்தில் பணிக்கு திரும்ப வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

கொரோனா: புதுச்சேரியில் இன்று கர்ப்பிணி உட்பட 16 பேருக்கு கொரோனா தொற்று..இந்திய, சீனா ராணுவ மேஜர் இடையே இன்று 4-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 
First published: June 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading