முகப்பு /செய்தி /இந்தியா - சீனா / எல்லை விவகாரத்தில் உடன்பட மறுக்கும் சீனா: 13வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி!

எல்லை விவகாரத்தில் உடன்பட மறுக்கும் சீனா: 13வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி!

இந்தியா- சீனா எல்லை  ..

இந்தியா- சீனா எல்லை ..

  • 1-MIN READ
  • Last Updated :

இந்திய- சீன ராணுவத்துக்கு இடையே நேற்று நடைபெற்ற 13வது சுற்று பேச்சுவார்த்தையில், சீனா இந்தியாவின் ஆலோசனைகளை ஏற்க மறுத்ததால் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என்று இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

சீனா  தனது ராணுவ வீரர்களுக்கு எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே கொள்கலன் மூலம் தங்குமிடங்களை அமைத்துள்ளது தெரியவந்துள்ளது. டாஷிகோங், மான்சா, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் சுருப் போன்ற இடங்களின் அருகே தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தங்குமிடங்கள் மட்டுமல்லாது, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட,   நிலத்தில் இருந்தபடி வானில் பறப்பவற்றை தாக்கவல்ல எஸ்400 ஏவுகணைகள் இரண்டையும் எல்லையில் சீனா நிலைநிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.  இதேபோல், விமான ஓடுதளங்கள், வான் பாதுகாப்பு கட்டமைப்புகளையும் சீனா உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

இதேபோல், அருணாசல பிரதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தவாங் செக்டரில் இந்திய நிலப் பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரா்களை இந்திய ராணுவத்தினா் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: மருந்து உற்பத்தி நிறுவனத்தில் நடத்திய சோதனையில் ரூ.142 கோடி பறிமுதல்: ரூ.550 கோடியை கணக்கில் காட்டாததும் கண்டுபிடிப்பு!

எல்லைப்பகுதியில் இருந்த ஆளில்லா பங்கர்களை சேதப்படுத்த முயன்ற சீன ராணுவ வீரர்களின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்ததோடு சுமார் 200 சீன ராணுவ வீரர்களை தற்காலிகமாக சிறைப்பிடித்து வைத்தது. எல்லை விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சுழல் நிலவுவரும் நிலையில், நேற்று இருநாட்டு ராணுவ உயரதிகார்களும்  பங்கேற்ற 13வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஏற்றுக்கொள்ள மறுக்கும் சீனா

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மெய்யான கட்டுப்பாட்டு கோட்டில் (LAC) நிகழும்  பிரச்சனையை  தீர்க்க இந்திய இராணுவம் அளித்த ஆக்கபூர்வமான பரிந்துரைகளுக்கு சீன இராணுவம் உடன்படவில்லை. இதனால் 13வது சுற்று பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நிலக்கரி தட்டுப்பாடு குறித்து தேவையில்லாத பீதி நிலவி வருகிறது - மத்திய அமைச்சர் விளக்கம்

இரு தரப்பினரும் தகவல்தொடர்புகளை பராமரிக்கவும், களத்தின் ஸ்திரத்தன்மையை பராமரிக்கவும் ஒப்புக்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், இந்தியா “நியாயமற்ற மற்றும் உண்மையற்ற கோரிக்கைகளை முன்வைத்ததாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: China vs India, Indian army, Ladakh