வழக்கத்துக்கு விரோதமான ஆயுதங்களுடன் சீனாதான் எல்லையில் பதற்றத்தை அதிகரித்தனர்: ஆண்டறிக்கை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சகம்
வழக்கத்துக்கு விரோதமான ஆயுதங்களுடன் சீனாதான் எல்லையில் பதற்றத்தை அதிகரித்தனர்: ஆண்டறிக்கை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சகம் ஆண்டறிகை தாக்கல்
எல்லையில் இந்திய வீரர்கள் விழிப்புடன் இருப்பதால் பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவ முடியவில்லை. மேலும் ராணுவ நடவடிக்கையின் சிலபல சாதுரியமான நகர்த்தலால் பயங்கரவாதிகளுக்கான இடம் அங்கு அழிக்கப்பட்டுள்ளது.
வழக்கத்துக்கு விரோதமான ஆயுதங்களுடன் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் தொடர்ந்து படைகளை அதிகரித்து பதற்றத்தை உருவாக்கியது சீனாதான் என்று பாதுகாப்பு அமைச்சகம் தன் ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோல் என்ற எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனா தன்னிச்சையாகவும் பதற்றத்தை தூண்டும் விதமாகவும் செயல்பட்டது. ஏற்கெனவே இருக்கும் நிலையை பலவந்தமாக மாற்றப் பார்த்தது. இந்தியப் படைகள் உறுதியாகவும் அதே வேளையில் பிரச்சனைகள் அதிகமாகாத வகையிலும் பதிலடி கொடுத்தது என்று பாதுகாப்பு அமைச்சகம் தன் ஆண்டறிக்கையில் கூறியுள்ளது.
சீனாவின் எந்த ஒரு தீய நோக்கத்தையும் முறியடிக்கும் வல்லமை இந்திய துருப்புகளிடம் உள்ளது. எந்த ஒரு திடீர் தாக்குதலை எதிர்கொள்ளவும் இந்தியா தயாராக உள்ளது. மேலும் சுமுகமாகப் பிரச்சனைகளைத் தீர்க்க பலமட்ட பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.
கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ம் தேதியன்று சீன படையினர் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் எய்தினர், ஆனால் சீனத் தரப்பிலும் குறிப்பிடத்தகுந்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன.
இந்திய விமானப்படையின் உதவியுடன் இந்திய ராணுவம் படைகளை அதிகரித்தது, துப்பாக்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களையும் டேங்குகள் மற்றும் வெடிபொருட்களையும், தேவையான உணவுப்பொருட்களையும் உடைகளையும் குறுகிய காலத்தில் சேர்த்து வைத்துக் கொண்டது.
கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலுக்குப் பிறகு ஆகஸ்ட் 28, 29 தேதிகளில் இந்திய ராணுவம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு சீன ஆக்ரமிப்புகளை முன் தவிர்த்தது. பருவநிலை மிக மோசமாக இருந்த போதிலும் இந்திய வீரர்கள் தைரியமாக இங்கு முகாமிட்டு சீனாவைத் தடுத்து வருகின்றனர்.
பனிக்காலத்திற்கான உடைகள், பனிக்காலத் தயாரிப்புகள் நிறைவு செய்யப்பட்டன.
கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் செயல்பாட்டு தயாரிப்பு நிலையில் எந்த வித பின்னடைவும் இல்லை. எல்லைகளைப் பாதுகாப்பதில் விழிப்புடன் இந்திய ராணுவம் செயல்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் நிலைமை சுமுகமாக இருக்க பாதுகாப்பு படையினரே முக்கியக் காரணம்.
மேலும் எல்லையில் இந்திய வீரர்கள் விழிப்புடன் இருப்பதால் பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவ முடியவில்லை. மேலும் ராணுவ நடவடிக்கையின் சிலபல சாதுரியமான நகர்த்தலால் பயங்கரவாதிகளுக்கான இடம் அங்கு அழிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் போர்நிறுத்த மீறல் நடவடிக்கைகளுக்கு உரிய பதிலடி கொடுத்து வருகிறோம். ஊடுருவலுக்கு எதிரான நடவடிக்கைகளால் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் திறம்படத் தடுக்கப்பட்டு வருகிறது.
காஷ்மீரில் தீவிரவாதிகள் எண்ணிக்கை 200 க்கும் கீழ் குறைந்துள்ளது, புதிதாகத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளும் திறம்பட தடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜம்முகாஷ்மீரில் போராட்டங்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் குறைந்துள்ளது. பொய்த்தகவல்களை பரப்பும் சக்திகளும் முறியடிக்கப் பட்டு வருகின்றன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.