இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்த சீன ராணுவ ஜெனரல் உத்தரவு - அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி தகவல்

இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்தும்படி சீன ராணுவ ஜெனரல் ஜோ ஜோங்கியூ (Zhao Zongqi) கட்டளையிட்டதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது

இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்த சீன ராணுவ ஜெனரல் உத்தரவு - அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி தகவல்
கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் இந்திய படைகள் (கோப்புப்படம்)
  • Share this:
லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு அருகே இந்திய சீனா மோதலை அடுத்து, தற்போது அப்பகுதியில் பதற்றத்தை தனிப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவை தாக்கும்படி சீன ராணுவ ஜெனரல் உத்தரவு அளித்தது தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது,

இந்தியா - சீனா எல்லையில் இரு நாட்டு படை வீரர்களும் குவிக்கப்பட்டதில் இருந்து சீன ராணுவ ஜெனரல் ஜோங்கியூ நிலைமையை உன்னிப்பாக கவனித்து வந்ததாகவும், இந்தியா மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் சீனாவை பலவீனமான நாடாக கருதிவிடக் கூடாது என்பதால் இந்தியாவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று அவர் அந்நாட்டு வீரர்களுக்கு உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும் படிக்க...

புதுச்சேரியில் இன்று முதல் மீண்டும் அமலுக்கு வருகிறது கட்டுப்பாடுகள்முன்னதாக கல்வான் பகுதியில் நடைபெற்ற மோதலில் சீன படையினர் 35 பேர் வரை உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
First published: June 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading