Home /News /india-china /

கூடாரங்கள் அகற்றம்; கணிசமான வீரர்களை திரும்பப் பெற்றுக்கொண்ட இரு தரப்பு ராணுவம்

கூடாரங்கள் அகற்றம்; கணிசமான வீரர்களை திரும்பப் பெற்றுக்கொண்ட இரு தரப்பு ராணுவம்

கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் இந்திய படைகள் (கோப்புப்படம்)

கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் இந்திய படைகள் (கோப்புப்படம்)

இந்தியா- சீன பேச்சுவார்த்தையை தொடர்ந்து லடாக் எல்லையில் சில பகுதிகளில் இருந்து இருநாட்டு படைகள் வாபஸ் பெற்றுள்ளன.

  • News18
  • Last Updated :
    லடாக் அருகே இந்திய எல்லைப்பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்னர் திடீரென சீன படைகள் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவும் தனது படையை எல்லையில் குவித்தது.

    இரு தரப்பு இடையே கைக்கலப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறின. இதனை அடுத்து, பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக பிரச்னையை தீர்க்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், பிபி-15 ரோந்து பகுதி ஆகிய 3 இடங்களில் இருந்து சீன ராணுவமும், இந்திய ராணுவமும் தங்கள் வீரர்களில் கணிசமான பேரை திரும்ப பெற்றுக் கொண்டதாகவும், இரு தரப்பினரும் அமைத்து இருந்து கூடாரங்கள் உள்ளிட்டவை அப்புறப்படுத்தப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது.

    பங்கோங் சோ, தவுலத் பெக் ஒல்டி ஆகிய பகுதிகளில் எல்லையில் முகாமிட்டு இருக்கும் இரு நாட்டு படைகளின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் எல்லையில் பதற்றத்தை மேலும் தணிக்க இரு நாட்டு ராணுவ மேஜர் ஜெனரல்கள் இன்று சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    Also See: தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் எவை... எவை...? - மாவட்டம் வாரியாக முழு பட்டியல்








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Published by:Sankar
    First published:

    Tags: China vs India

    அடுத்த செய்தி